குடும்ப வரி விதிப்பால் சவுதி அரேபியாவில் இருந்து லட்சகணக்கான இந்தியர்கள் வெளியேறும் அபாயம்
புதிய குடும்ப வரி விதிப்பால் சவுதி அரேபியாவில் இருந்து லட்சகணக்கான இந்தியர்கள் வெளியேறும் அபாயம்
புதிய குடும்ப வரி விதிப்பால் சவுதி அரேபியாவில் இருந்து லட்சகணக்கான இந்தியர்கள் வெளியேறும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
சவூதி அரேபியாவில் வேலை செய்து வரும் இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் குடியேறுவது வழக்கம். ஆனால் குடும்ப வரி அதிகரித்ததை தொடர்ந்து குடும்பத்தினரை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பும் என்னத்தில் உள்ளனர் சவூதியில் வேலை பார்த்து வரும் இந்தியர்கள்.
சவூதி அரேபியாவில் இந்தியர்களின் மாத வருமானம் 5,000 ரியால் (ரூ.86,000) வாங்கினால் மட்டுமே குடும்பத்துடன் குடியேற அனுமதி வழங்கப்படும். சவூதி அரேபியாவில் 41 லட்சம் இந்தியர்கள் உள்ளனர்.
ஒரு நபருக்கு மாதம் 100 ரியால் (ரூ.1,700) வரியாக வசூலிக்கப்படும் என சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 2020க்குள் ஒரு நபருக்கான மாத வரி 400 ரியாலாக (ரூ.6,900) உயர்த்தப்படும் என தெரிவித்தனர்.
சில இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினரை இந்தியாவிற்கே திருப்பி அனுப்பிவிட்டனர் என தம்மாமில் வாழும் கணினி நிபுணர் முகமது தாஹர் கூறினார்.
இது குறித்து குடிபெயர்ந்தோர் உரிமை ஆர்வலர் பீம் ரெட்டி மந்தா கூறுகையில் “நான்கு மாதம் முன்பே இங்கு வாழும் இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினரை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப தொடங்கிவிட்டனர் ” இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வரி விதிப்பு சவூதியில் வாழும் இந்தியர்களை மிகவும் பாதிக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.