மாறுபட்ட யூலை 1983 & 2017

பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஓர் சரித்திரமாக இருக்கவேண்டும் 


இலங்கையின் வரலாற்றின் மாறாத வடுவாய் உள்ள பக்கங்களில் 1983 கறுப்பு யூலை இனப் படுகொலையின் ஆரம்பமாகவே இருந்தது. ஆனால் 2017 யூலை தமிழனுக்காய் தமிழகத்தில் உயிர்நீத்த சிங்கள சகோதரர்.
எத்தனையோ போலீஸார் கடமைக்காக வீரமரணம் அடைந்த சம்பவம் இலங்கை வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. ஆனால் தமிழ் நீதிபதியை காக்க உயிர்த் தியாகம் செய்த இனபேதமற்ற உயிர் தியாகம் என்றும் வரலாற்றில் மறக்கப்படாத ஓர் சம்பவமே...!
வரலாற்றை மாற்றியமைத்து புரட்டிப்போட்ட சம்பவமே சார்ஜன் ஹேமச்சந்திர அவர்களது உயிர்த் தியாகம். தமிழ் மண்ணில் நீதியின் பதியாய் யாழ் மக்கள் மனதில் வலம்வரும் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஐயா அவர்களது மெய்ப் பாதுகாவலனாக 15 வருடங்கள் கடமையாற்றிய சிங்கள சகோதரர் ஹேமச்சந்திர தன் உயிரை பொருட்படுத்தாமல் தமிழ் நீதிபதியின் உயிரை காக்க தன் உயிரை நீத்து உயிர்த் தியாகம் செய்துள்ளார். இது இலங்கையின் இனக் கலவர வரலாற்றையே புரட்டிப்போட்ட ஓர் சம்பவமே. இன்று தமிழ் மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்ற சார்ஜன் ஹேமச்சந்திர அவர்களுக்கு தமிழராய் வீரவணக்கம் செய்வதில் பெருமையடைகின்றோம். இனப் போராட்டம் என்ற சொல் இனி இலங்கையில் வலம்வராமல் இருக்க இந்த சம்பவத்தை முடிவாக கருதி வரலாற்றை மாற்றிவிடுங்கள். 

முடிவுறட்டும் அவலம் 
சார்ஜன் ஹேமச்சந்திர அவர்களின் உயிர்த் தியாகத்தில் தோன்றட்டும்
புதிய இனபேதமற்ற நாடு 

No comments

Theme images by mammuth. Powered by Blogger.