20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

காபூல்: 20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடித்து ஆஃப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த சஃபிக்குல்லா சஃபாக் புதிய சாதனை படைத்துள்ளார்.


ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில், சஃபிக்குல்லா சஃபாக் இரட்டை சதம் விளாசியுள்ளார். இந்த போட்டியில் 71 பந்துகளில் 214 ரன்கள் குவித்துள்ளார். இதில் 21 சிக்சர்களும், 16 பவுண்டரிகளும் அடங்கும். 20 ஓவர்கள் முடிவில் அவர் விளையாடிய அணி 351 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய எதிரணி 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரட்டை சதம் குவித்ததன் மூலம் தற்போது சஃபாக் பிரபலமடைந்துள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவுடன் நடந்த போட்டியில் இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் 200 ரன்கள் குவித்தார். இதற்குப் பிறகு சேவாக், ரோஹித் ஷர்மா, கிறிஸ் கெயில், மார்டின் கப்தில் ஆகியோர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்தனர். ஆனால், சர்வதேச அளவில் டி-20 போட்டிகளில் இதுவரை யாரும் இரட்டை சதமடிக்கவில்லை. அதனை தற்போது சஃபாக் முறியடித்துள்ளார். ஆனால் கடந்த ஐ.பி.எல் போட்டி ஏலத்தின் போது எந்த அணியும் இவரை வாங்க முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Theme images by mammuth. Powered by Blogger.