நல்லூரான் திருவிழா நாளை ஆரம்பம் 28.07.2017

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(28) முற்பகல்- 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.


இந்நிலையில் ஆலயத்திற்குச் சென்று வழிபடும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் நலன் கருதி இன்று வியாழக்கிழமை முதல் நல்லூர் ஆலயத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளையும் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்துச் சாரதிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ். நகரிலிருந்து பருத்தித்துறை செல்லும் வாகனங்கள் ஆனைப்பந்திச் சந்தி, நாவலர் வீதி, நல்லூர் குறுக்கு வீதி, பருத்தித்துறை வீதியூடாகப் பயணிக்குமாறும்,
பருத்தித் துறை வீதியூடாக யாழ். நகர் நோக்கி வரும் வாகனங்கள் முத்திரைச் சந்தி, செம்மணி வீதி, கச்சேரி - நல்லூர் வீதி, கண்டி வீதி சென்றடைந்து அங்கிருந்து யாழ். பேருந்து நிலையத்தைச் சென்றடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வீதி மாற்று நடைமுறை இன்று வியாழக்கிழமை(27) நண்பகல்- 12 மணி முதல் அடுத்த மாதம்- 23ம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படுமெனவும், எனவே, வாகனச் சாரதிகள் இந்த மாற்று வீதி ஒழுங்குகளைக் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறும் யாழ். மாநகர சபையின் ஆணையாளர் வாகனச் சாரதிகளிடம் கேட்டுள்ளார்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.