கடலுக்கு அடியில் புதைந்து கிடந்த 35 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கம். 300 வருட மர்மம்.
கடந்த 1708 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சான் ஜோஸ் என்னும் கப்பல் பல்லாயிரம் கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மிகவும் பாதுகாப்பாக கொண்டு சென்றது. அப்போது அந்த கப்பலை வழி மரித்த இங்கிலாந்து படை வீரர்கள் அதை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு சண்டையில் இறங்கினர். அனால் அந்த சண்டையின் இறுதியில் அந்த கப்பல் மேல் குண்டு வீசப்பட்டதால் அது தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களோடு கொலம்பி கடற்பகுதியில் மூழ்கிப்போனது
இதனை அடுத்து பல பொக்கிஷங்கள் நிறைந்த அந்த கப்பலை தேடும் பணியில் கொலம்பிய அரசு தீவிரமாக இறங்கியது. பல வருடங்கள் தேடலின் பயனாக கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் அந்த கப்பல் இருக்கும் இடம் கண்டுபிடிக்கபட்டதாக அறிவிக்கப்பட்டது. அனால் அது எந்த இடம் என்பதை பாதுகாப்பு கருதி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அந்த கப்பலில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் இருப்பதை கொலம்பியாவை சேர்ந்த நிபுணர்கள் உறுதி செய்தனர். அதன் மதிப்பு கிட்ட தட்ட 35 ஆயிரம் கோடியை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 300 ஆண்டுகள் நீடித்த மர்மம் ஒரு வழியாக விலகியது.
