80 தடவைகள் மீண்டும் மீண்டும் அச்சிடக்கூடிய புதிய காகிதம் விஞ்ஞானிகளால் உருவாக்கம்.

அச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக் காகிதம் உருவாக்க‌ப்பட்டிருக்கிறது.
அந்த துகள்களை, அச்சிடும் மையில் கலந்து அச்சிட வேண்டும், அச்சிடப்பட்டு 5 நாட்களில் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காகிதத்திலிருந்து மறைய ஆரம்பிக்கும்.
காற்றிலுள்ள ஒட்சிசன் துகள்கள் மையிலுள்ள எலக்ட்ரான்களை எடுத்துக்கொள்ளும், இதனால் எழுத்துக்கள் காகிதத்திலிருந்து மறையும்.
மேலும் காகிதத்தை சூடாக்கும் போது, இந்த செயல்முறையை சில நிமிடங்களில் வேகப்படுத்துவதன் மூலம் காகிதத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.