மாலைதீவு நாடாளுமன்றம் அந்த நாட்டு இராணுவத்தால் முற்றுகை

மாலைதீவு நாடாளுமன்றம் அந் நாட்டு இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

அந்த நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமினின் உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாலை தீவு சபாநாயகர் அப்துல்லா மஸிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளக் கூடாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இராணுவத்தால் நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என அந்த நாட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை, மாலைதீவில் ஜனாதிபதி ஆட்சி இடம்பெறுகின்ற நிலையில், சபாநாயகருக்கொதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையே குறித்த முற்றுகைக்கு காரணம் என தொிவிக்கப்படுகின்றது.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.