இளைஞர் தாகசாந்தி நிலையத்தின் ஆன்மசாந்தி செயற்திட்டம் என்றே கூற வேண்டும்

இளைஞர் தாகசாந்தி நிலையத்தின் இணைந்துதவும் நிகழச்சி திட்டத்தின்கீழ் இலங்கையில் யுத்தம்,வறுமை மற்றும் அசாதரண சூழ்நிலைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வறிய மக்களின் குடும்ப நிலவரத்தின் உண்மைத்தன்மையினை இளைஞர் தாகசாந்தி நிலைய உறுப்பினர்கள் நேரில் சென்று ஆராய்ந்து இரண்டாம் கட்டமாக 43 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள், உடுபுடவைகள்,பாடசாலைஉபகரணங்களும் ஒட்டு/பிரதேச செயலகத்தின் பிரதாண மண்டபத்தில வைத்துவழங்கப்பட்டன இதற்காக ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் சுதாகரன்−நிந்துனா தம்பதிகளும், இலங்கை போக்குவரத்து சபை கோண்டாவில் சாலை ஊழியர்களின் நிதியுதவியிலும் எமது வெளித் தொடர்பு உறுப்பினர் தெ.பிரசாந்தன் அனுசரனையிலும் இவ் உதவித்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. ( இவ் நிகழ்வுக்கு ஓத்துழைப்பு வழங்கிய பிரதேசசெயலர்,உதவி பிரதேசசெயலர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம சேவையாளர்கள் அனைவருக்கும் இளைஞர் தாகசாந்திநிலையம்சார்பாக நன்றிகள..)
Theme images by mammuth. Powered by Blogger.