நம்பமுடிகிறதா இந்த உண்மையை... ? கொரியாவை ஆண்ட தமிழிச்சி
கன்னியாகுமரியிலிருந்து சென்ற தமிழிச்சி கொரியாவை ஆண்டுள்ளார்..! சிறந்த ஆளுமைக்காக நம் தமிழச்சியை கடவுளாக கொண்டாடும் மக்கள்..!
ஹியோ ஹாங் ஒக் என்பவர் தென் கொரிய நாட்டு மகாராணி. இவர் காயா நாட்டு மன்னரான சுரோ என்பவரை விவாகம்(திருமணம்) செய்து கொண்டார்..
இதில் தான் பல ஆச்சரியம் புதைந்திருக்கிறது..
ஹியோ ஹாங் ஒக் கடல் வழியே காயாவை அடைந்து மன்னர் சுரோவை திருமணம் செய்துக் கொண்டார் என்பது வரலாறு..
ஹியோ ஹாங் ஒக் எதன் வழியே வந்தார்? அவரது பூர்வீகம் என்ன? சுரோவை மணக்கவே இவர் கடல் பயணம் மேற்கொண்டாரா என பல கேள்விகள் எழுகின்றன..
தென் கொரிய வரலாறு ஆனது, ஹியோ ஹாங் ஒக் ஆயுஹுத்தா எனும் இடத்தில் இருந்து வந்துள்ளார் என்கிறது..
அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்களோ, அது அயோத்தியா என கூறி, ஹியோ ஹாங் ஒக் அயோத்திய இளவரசி தான் என்கின்றனர்..
அயோத்தியாவில் இருக்கும் இவரது நினைவு இல்லத்திற்கு , ஒவ்வொரு வருடமும் கோடிகணக்கான கொரியர்கள் வந்து செல்கின்றனர்..
ஆனால், வேறுசில ஆய்வாளர்கள் அயோத்தியாவில் தான் கடலே இல்லையே? அவர் எப்படி சென்றிருப்பார் என கூறி பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர்..
தற்போது, தென்கொரிய வரலாற்றில் முக்கியமான இடம் பிடித்துள்ள ஹியோ ஹாங் ஒக் எங்கிருந்து வந்தார் என்பது நமக்கு ஒரு புரியாத புதிராகவே உள்ளது.
