தமிழன் யார் என்பதைக் காட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது - விழித்துக்கொள் தமிழா

தமிழா ...!
எம்மை யாரும் முடக்கவில்லை
நாம்தான் முடங்கிப்போய் இருக்கின்றோம்
ஜாதிகளாய்
மாதங்களாய்
தொழில்களாய்
அந்தஸ்த்துக்களாய்
பிரிக்கப் படடோம்
இலவசத்தை நம்பி நம்பி சோம்பேறிகள் ஆகிவிட்டோம்
நாம் அடிமைகள் அல்ல
அடிமைத்தனத்தை விரும்பும் எச்சியிலை பொறுக்கும்
கூட்டமாய் ஆகிவிட்டோம்...!

சினிமா
நாடகம்
கிறிக்கற்
பேஸ்புக் பைத்தியங்கள்
வாட்ஸாப் மொக்கைபோடும் மொக்குகள்
என்றெல்லாம் எம் இனமே மூழ்கி நாசமாய் போவதை
பார்த்து பார்த்து
பேசாமல் போவோம் என்று நினைத்துவிட்டார்கள்...!

எழுந்துகொள் தமிழா
ஒற்றுமைப்படு
எல்லாவற்றையும் எடுத்து வீசு
எந்த இலவசத்தையும் வைத்துக்கொள்ளாதே
எல்லாவற்றையும் தூக்கி எறி
எம் இடத்தில எவனையும் அனுமதிக்காதே
அரசு சட்டம் என்று எது உன்னை தடுக்க வந்தாலும்
அடித்து விரட்டு...!

எம் இனத்தை அல்ல
எம்மைக் காப்போம்
உலகைக் காப்போம்
அழிவால் வியாபாரம் தேடும் கூட்டம்
தமிழரால் தான் அழியவேண்டும் என்றால்
அதை யாரால் மாற்ற முடியும் ...!

உனக்காய் நான் இருக்கிறேன்
எனக்காய் நீங்கள் இருக்கிறீர்கள்
நமக்காய் நாம் இருப்போம்
அரசியல் வேண்டாம்
அடிமைத் தனமும் வேண்டாம்
போராட்டம் வேண்டாம்
போராட்டம் என்ற போர்வையில் எங்களை யாரும்
புழுவாய் நசுக்க வேண்டாம் ...!

இழப்போம்
எல்லாவற்றையும் இழப்போம்
இலவசங்களாய் திணிக்கப்பட்ட
எல்லாவற்றையும் இழப்போம்
எமக்கானதை நாமே செய்வோம்
புதுயுகம் படைப்போம் ...!

அடக்கவரும் கூட்டத்தை அடித்து விரட்டுவோம்
நமக்காய் மனிதம் வரும்
மனிதராய் போராடுவோம்
மனிதத்தை மட்டும் மனதில் வைப்போம் ...!

ஐம்பதுபேர் கொண்ட கூட்டம்
ஐம்பதாயிரத்தை மிரட்டுகிறது
ஐம்பதாயிரம் கொண்ட கூட்டம்
ஐம்பது கோடியை மிரட்டுகிறது
என்ன ஒரு கேலி

நம்மைப் பிரித்து நம்மை சீண்டிப்பார்க்கிறார்கள்
மனிதராய் கைகோருங்கள்
எதிர்த்து நில்லுங்கள்
இயற்கையை அழித்து
எம்மை அழிக்கும்
எல்லா வர்த்தகத்தையும்
ஒருகை பார்த்துவிடலாம் ...!


ஞா. நிரோஜன்


Theme images by mammuth. Powered by Blogger.