உங்களுக்கு பதில் கூறவேண்டிய அவசியமில்லை! மகிந்தவை நேரில் சாடிய விஜயகலா

உங்களுக்கு பதில் கூறவேண்டிய அவசியமில்லை! மகிந்தவை நேரில் கடுமையாக சாடிய சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
வடமாகாண மீனவர் பிரச்சினை மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து உரையாற்றிக்கொண்டிருந்த அவர், இரணைதீவு தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்தார்.
"இரணைதீவில் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்க வேண்டும் என கடந்த அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.
முன்னாள் ஜனாதிபதியும் இங்கு இருக்கின்றார். எனினும், அவர் எதனையும் செய்யவில்லை" என மகிந்த ராஜபக்ச மீது அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
எனினும், இதன் போது குறுக்கிட்டு பேசிய கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயசேகர, இராஜாங்க அமைச்சரின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
அவ்வாறு இல்லாவிடின் தனது கருத்தை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து பேசிய விஜயகலா மகேஸ்வரன் "உங்களுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. மக்கள் உண்மைகளை அறிந்து வைத்துள்ளார்கள்.
மக்களே எங்களுக்கு ஆணையை வழங்கி இங்கு அனுப்பி வைத்துள்ளார்கள்" என கூறியதுடன், தனது கருத்தை மீள பெற முடியாது எனவும் கூறியிருந்தார்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போது கூட்டு எதிர்க்கட்சியினர் குழப்பம் ஏற்படுத்தியிருந்தனர்.
இதன் காரணமாக சுமார் ஐந்து நிமிடங்கள் வரையில் விஜயகலா மகேஸ்வரன் ஆசனத்தில் இருந்து எழுந்தவாறு தனது உரையை தொடர்வதற்கு அனுமதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Theme images by mammuth. Powered by Blogger.