வரலாற்றுச் சாதனை நெடுந்தீவுக்குப் பெருமை சவால்களைத் தாண்டி சாதித்த மாணவிகள் : மக்கள் சார்பில் தமிழ் யாழ் இணையத்தின் வாழ்த்துக்கள்
மிகப் பின்தங்கிய தீவகவலயத்தின் நெடுந்தீவுப் பாடசாலைகளில் இருந்து வடக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டியில் பங்குபற்றி சாதனை படைத்திருக்கின்றனர் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவி ஜி.திருட்சிகா மற்றும் நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி ஏ.நிரோஜினி.
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லூனர் போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றன.
இப் போட்டிகளில் 16 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றர், 400 மீற்றர், 800 மீற்றர், போட்டிகளில் பங்குபற்றி மூன்று போட்டிகளிலும் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று தீவக வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அதேவேளை 16 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான குண்டு போடுதல் நிகழ்வில் பங்குபற்றிய நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி ஏ.நிரோஜினி வெண்கலப் பதக்கத்தைப் பெற்று தீவகத்துக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மிகப் பின்தங்கிய வலயமான தீவகத்தில் இருந்து பல சவால்களுக்கு மத்தியில் போட்டிகளில் பங்குபற்றிய குறித்த மாணவிகளின் திறமைகள் பாராட்டுக்குரியவை.
குறித்த மாணவிகள் தமது வெற்றி குறித்து கருத்துவெளியிடும் போது,
நெடுந்தீவைப் பொத்தவரை எமது பாடசாலைகள் விளையாட்டுத் துறைக்கான போதிய பௌதீக வளங்களை கொண்டிராத நிலையிலும் பாடசாலை 4மூகத்தில் ஊக்கத்தாலும் முயற்சியாலும் இன்று சாதிக்க முடிந்திருப்பதையிட்டு மகிழ்ச்சியாக இரக்கின்றது.
பல திறமையான வீரர்கள்ஈ வீராங்கனைகள் எமது பிரதேசத்தில் இருந்தும் போதிய வளங்கள் இன்மையால் பல போட்டிகளில் பங்குபற்றமுடியாத நிலை காணப்படுகின்றன.
எதிர்காலத்தில் எமது பிரதேசப் பாடசாலைகளுக்கு உரிய வளம் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இன்னும் பலர் மாகாணம் தேசயம் என்பவற்றில் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு எனத் தெரிவித்தனர்.
