இலங்கை பெற்றோல் விநியோகம் இன்று காலை முதல் இராணுவத்தின் கையில்

அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ள எரிபொருள் விநியோகத்தை இன்று காலை முதல் இராணுவம் மேற்கொள்ளும் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கனியவள ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இதனால், நேற்று முன்தினம் இரவு முதல் பிரதான நகரங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சாரதிகளும் பொது மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.
இந்த நிலையில், எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக கருதி, ஊழியர்களின் பணிப்புறக் கணிப்பின்போது, இராணுவத்தால் அந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.


No comments

Theme images by mammuth. Powered by Blogger.