இணுவையூர் சக்திதாசனின் யாழ்ப்பாணம் சென்றுவந்தேன் ...! கவிதை ஒளி(லி)த் தொகுப்பு
தமிழ் யாழ் ஊடக அனுசரணையில்
புலம்பெயர் படைப்பாளி
இணுவையூர் சக்திதாசனின்
யாழ்ப்பாணம் சென்றுவந்தேன் ...!
கவிதை ஒளி(லி)த் தொகுப்பு
யாழ்ப்பாணம் சென்றுவந்தேன் ...!
கவிதை ஒளி(லி)த் தொகுப்பு
புலம்பெயர் படைப்பாளிகளில் ஒருவர் இலங்கையில் யாழ் தாவடியில் பிறந்த இவர் இணுவிலை வசிப்பிடமாக கொண்டவர் கனகசபாபதி சக்திதாசன். இளம் கவிஞர்,கலைஞர்.
கடந்த 25 வருடங்களா புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார்.
கொக்குவில் மேற்கு cctm தமிழ் கலவன், கொக்குவில் இந்துக்கல்லூரி, கொக்குவில் தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றின் பழய மாணவரான இவர் தமிழில் அதிக ஆர்வம் கொண்டு பட்டிமன்றம் கருத்தரங்கம் கவியரங்கம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு உடையவராக இருக்கிறார்.
இவர் புலம்பெயர்விற்கு பிறகு புதுக்கவிதையிலே அதிக ஈடுபாடு கொண்டவராக டென்மார்கில் பல மேடைகளில் தனது குரல்வளத்தால் இரசிகர்களை கவர்ந்து கொண்டவர்.
சிறந்த நாடக நடிகரும் கூட, டென்மார்க்கில் தமிழ்த்தாய் நாடகமன்றம் ஒன்றின் அமைப்பாளராக இருந்து 24வருடங்களாக பலவிதமான நாடகங்களை மேடையேற்றிக்கொண்டிருப்பவர். தனிநடிப்பில் தொடங்கி .. 25நடிகர்கர்கள் வரை இவரது நாடக மன்றத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார்கள் வருடத்துக்கு குறைந்தது 2நாடகங்களாவது இவரது நெறியாழ்கையில் மேடையேறும்.
40 நாடகங்களுக்கு மேல் இவரது நெறியாழ்கையில் மேடையேறியிருக்கிறது. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் டென்மார்கில் பல மேடைகளில் கடந்த 24 வருடங்களாக பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்.
ஐரோப்பிய தமிழ் வானொலி தொலைக்காட்சி பலவற்றில் இவரது கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றது. தொலைக்காட்சி நாடகங்கள் ஒரு சிலவவற்றில் நடித்துமிருக்கிறார் .
டென்மார்கில் தயாரிக்கப்பட்ட முழு நிளத்திரைப்படம் மன்னிப்பாயா என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக இவர் நடித்திருக்கிருக்கிறார்.
இவரது கவிதைகள் பல சஞ்சிகைகள் பத்திரிகைகள் இணைய சஞ்சிகைகள் பலவற்றில் வெளியாகிக்கொண்டிருக்கிறது.
நெஞ்ச நெருடல் , காற்றை கானமாக்கிய புல்லாங்குழல், ஒர் அகதியின் கைரேகை ஆகிய இவரது 3கவிதைத்தொகுதிகள் புத்தகமாக வெளிவந்திருக்கின்றன
இவரது நெஞ்ச நெருடல் என்ற கவிதைத் தொகுதிக்கு இணுவில் பொது நூலக இலக்கிய வட்டத்தினால் வரகவி என பட்டமளித்து கௌரவிக்கப்பட்டவர்
இதுதவிர ´ கவிச்சாறல்;; ´ இவரது குரலில் கவிதைகள் இறுவெட்டாக வந்திருக்கிறது.
10 பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு இவரது பாடல்வரிக்கு தென்னிந்திய திரைப்படப் பாடகர் மாணிக்கவினாயகம் மற்றும் சீர்காழி சிவசிதம்பரம். ஆகியோருடன் மற்ரும் பலரது குரலில் பாரதிமோகன் இசையில் வெளியாகியிருக்கிறது. இலக்கியத்துறையில் பன்முக ஆற்றல் கொண்டவராக இருக்கிறார்
அமைதியாக மனைவி 3 பிள்ளைகளுடன் டென்மார்கில் கொல்பெக் என்னும் நகரினில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 1969 ம் ஆண்டு பிறந்த இவர் டென்மார்க்கில் வாடகை கார் ஓட்டுனராக பல வருடங்கள் பணியாற்றி விட்டு தற்போது ஒரு சிறிய வியாபார கடை suber marked ஒன்றை நடாத்திக்கொண்டிருக்கிறார்.