தமிழ் , சிங்கள மக்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலைமையாம் ...!
கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச அலுவலகங்களிலும் மாவட்ட செயலகங்களிலும் பிரதேச செயலகங்களிலும் பொலிஸிலும் பெரும்பான்மையோர் முஸ்லிம் அலுவலர்களாகவே இருக்கின்றனர்.
இதனால் தமிழ் மக்களினதும் சிங்கள மக்களினதும் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலைமை தோன்றியுள்ளது. இதனால் நாங்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றோம்.
அரச அலுவலகங்களிலும் மாவட்ட செயலகங்களிலும் பிரதேச செயலகங்களிலும் பொலிஸிலும் தேவையான தகுதியான அலுவலர்களை சரியாக பிரித்து பணியமர்த்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவருக்கு வேண்டிய விதத்தில் செயற்பட்டு வருகின்றார். அவர்தான் இந்த விளையாட்டை விளையாடுகின்றார்.
புனானையில்; ஆசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் கட்டப்பட்டு வருகின்றது. பெரிய பள்ளிவாசல் அமைப்பதில் தவறில்லை.ஆனால் பிற்காலத்தில் தமிழ் மக்களுக்கு அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவர்கள் ஆசியாவிலே மிகப் பெரிய பள்ளிவாசல் அமைக்கும்போது இந்து, பௌத்த, கத்தோலிக்க மதத்தை சேர்ந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதை இந்த நாட்டிலுள்ள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் மெதுவாக அதிகாரத்தை பயன்படுத்தி இதனை செய்து வருகின்றனர். முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளை முன்னிறுத்தி அவர்கள் வேலை செய்து வருகின்றனர்.
ஜிகாத் அமைப்பைச் சேர்ந்த 74 உறுப்பினர்கள் இலங்கையில் இருப்பதாக இன்று காலை சிங்கள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
அந்த 74பேரில் ஒருவர் இவ்விடத்தில் இருக்கலாம். இருந்து எல்லாவற்றையும் குழப்பி விட்டு நாட்டில் இனவாதமும் மதவாதமும் இருப்பதாக சமூகத்திற்கு காட்டப்போகின்றார்கள். அவர்கள் யாரும் எங்கள் மீது கை வைக்க வேண்டாம்.
நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் இருப்போம்.தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம்.
அவர்கள் யார் மீதும் கைவைக்க முற்பட்டால் அந்த ஒவ்வொரு நிலைமையிலும் அதனை எதிர்கொள்வோம். அதேபோல் சொத்துகளை அபகரித்தால் அந்த மக்களுக்காக அதனை பெற்றுக்கொடுப்பதற்கு உயிர்த் தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கின்றேன் என்றார்.