நாளை பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு
மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் உண்மையான தாக்குதலாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாளை திங்கள்கிழமை வடக்கு மாகாண சட்டத்தரணிகள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடுவர் என்று அறிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்த தாக்குதல் நீதித்துறை மீதான அச்சுறுத்தாகும். அதனைத் திட்டமிட்டுச் செய்தோரை நீதிக்கும் முன் நிறுத்தும் பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு. எனவே உண்மையான தாக்குதலாளியைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்தப் பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை வலியுறுத்தி நாளை திங்கள்கிழமை வடக்கு மாகாணச் சட்டத்தரணிகள் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகமாட்டார்கள் என்று யாழ்ப்பாணம், வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் நேற்றிரவு அறிவித்தது.
இதேவேளை நாளைய தினம் வட மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினாலும் நாளைய தினம் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், நீதித்துறைக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையாயின் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்பதனை சிந்திக்க தலைப்பட்டுள்ளோம் என வட மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன் அரச தனியார் நிறுவனங்களும் பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments