சவூதிக்கு ஏமாற்­ற­ம­ளித்த கட்­டாரின் பதில்

கட்­டார் வழங்­கிய பதில் கடி­தத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்த விட­யங்கள் தொடர்பில் இது­வரை எந்­த­வி­த­மான தக­வல்­களும் வெளி­வ­ர­வில்லை. எனினும் கட்­டாரின் பதில் சவூதி தலை­மை­யி­லான நாடு­க­ளுக்கு ஏமாற்­றத்­தையும் ஆத்­தி­ரத்­தை­யுமே பதி­லாக வழங்­கி­யுள்­ள­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.


''கட்டார் இந்த விட­யத்தை சீரி­ய­ஸாக எடுக்­க­வில்லை. இந்தப் பிரச்­சி­னையின் யதார்த்­தத்தை புரிந்து கொள்­ள­வில்லை '' என்று மேற்­படி நாடுகள் கூட்­டாக விடுத்த அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளன. அத்­துடன் கட்­டா­ருக்கு உரிய நேரத்தில் பதி­லடி கொடுக்­கப்­படும் என்றும் அவை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தன. எனினும் அந்த பதி­லடி எவ்­வாறு அமையும் என்­பது தொடர்பில் இது­வரை சவூதி தலை­மை­யி­லான நாடுகள் எந்தக் கருத்­தையும் வெளி­யி­ட­வில்லை.
இதற்­கி­டையில் இந்த விட­யத்தில் மத்­தி­யஸ்தம் வகிக்­கவும் குவைத் தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் சமா­தான முயற்­சி­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கவும் ஐக்­கிய நாடுகள் சபை மற்றும் ஜேர்மன் என்­பன முன்­வந்­துள்­ளன.
கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கட்­டா­ருக்கு விஜயம் செய்த ஜேர்மன் வெளி­வி­வ­கார அமைச்சர் கெப்ரீல், கட்டார் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் சுயா­தீ­ன­மான புல­னாய்வை மேற்­கொள்­வ­தற்கு தமது நாடு தயா­ரா­க­வி­ருப்­ப­தாக அறி­வித்­துள்ளார்.
கட்டார் தீவி­ர­வாத குழுக்­க­ளுக்கு உத­வி­ய­ளிப்­ப­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து ஆராய்ந்து அவை பற்றி தெளி­வு­ப­டுத்­து­வ­தற்கு தமது நாட்டின் புல­னாய்வுச் சேவையை பயன்­ப­டுத்த முடியும் என அவர் குறிப்­பிட்­டுள்­ள­துடன் சவூதி தலை­மை­யி­லான நாடுகள் கட்டார் மீது இரா­ணுவ ரீதி­யான தாக்­கு­தல்­களை நடாத்­து­வ­தற்­காக வாய்ப்­புகள் இல்லை என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

---நெருக்­க­டி­களை சமா­ளிக்கத் தயா­ராகும் கட்டார்
சிறிய நாடான கட்டார், முன்­னெப்­போதும் இல்­லாத அர­சாங்க ரீதி­யான மற்றும் பொரு­ளா­தார ரீதி­யான தடை­களை சவூதி அரே­பியா, எகிப்து, ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்­ரை­னிடம் இருந்து எதிர்­கொண்­டுள்­ளது.
2.7 மில்­லியன் மக்­க­ளு­டைய அடிப்­படைத் தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­காக இறக்­கு­ம­தியை நம்பி­யி­ருக்கும் எண்ணெய் மற்றும் எரி­வாயு வள­முள்ள நாடான கட்­டா­ருக்கு இந்தக் கட்­டுப்­பா­டுகள் சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.
எனினும் இந்தத் தடை­யினால் பாதிப்­புகள் ஏற்­ப­டா­த­வாறு ஈரானும் துருக்­கியும் கட்­டா­ருக்­கான உணவு மற்றும் பிற பொருட்­களை வழங்கி வரு­கின்­றன. இதே­வேளை தனக்குத் தேவை­யான உணவை தானே உற்­பத்தி செய்து கொள்ளும் வகையில் கட்டார் சுய உணவு உற்­பத்­தியில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்­கி­யுள்­ளது.
சர்­வ­தேச அளவில் திர­வ­நிலை இயற்கை எரி­வாயு உற்­பத்­தியில் கட்டார் முன்­ன­ணியில் இருக்­கி­றது. எதிர்­வரும் ஆண்­டு­களில் கட்டார், திரவ இயற்கை எரி­வாயு (எல்.என்.ஜி) உற்­பத்தித் திறனை அதி­க­ரிக்­கப்­போ­வது தொடர்­பான திட்­டங்­களை செவ்­வா­யன்று அறி­வித்­துள்­ள­மையும் இங்கு குறிப்­பி­டத்­தக்­க­தாகும். 
எனினும் கட்டார் விமா­னங்கள் ஏனைய வளை­குடா நாடு­க­ளுக்குச் செல்­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­மை­யா­னது கட்­டாரின் பொரு­ளா­தா­ரத்தில் பலத்த தாக்­கத்தைச் செலுத்­தி­யுள்­ளது. அத்­துடன் குறித்த நாடு­களைச் சேர்ந்தோர் கட்­டாரில் முத­லிட்­டி­ருப்பின் அவற்றை வாபஸ் பெற்றுக் கொள்­ளு­மாறும் அங்­கி­ருந்து வெளி­யே­று­மாறு கோரி­யுள்­ள­மையும் கட்­டா­ருக்கு நெருக்­க­டி­களைக் கொடுத்­துள்­ளது. 
கட்டார் வெளி­வி­வ­கார அமைச்சர் சமீ­பத்தில் லண்­டனில் இடம்­பெற்ற கருத்­த­ரங்கு ஒன்றில் உரை­யாற்றும் போது, தமது நாட்டு மக்­களைப் பாது­காப்­ப­தற்கு என்­ன­வெல்லாம் செய்ய முடி­யுமோ அத்­த­னை­யையும் செய்வோம் என குறிப்­பிட்­டி­ருந்தார்.
சவூதி தலைமையிலான வளைகுடா நாடுகளின் தடையானது கட்டாரின் இறைமையை முற்றுமுழுதாக குழிதோண்டிப் புதைப்பதாக உள்ளதாக குற்றம்சாட்டிய அவர், எனினும் எமது அயல் நாடுகளுடனான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கட்டார் எப்போதும் தயாராகவே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் கட்டாரின் சொந்த விடயங்களில் வேறு நாடுகள் தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆக கட்டாருக்கும் சவூதி தலைமையிலான நாடுகளுக்குமிடையிலான முறுகல் தற்போது மற்றுமொரு கட்டத்தை அடைந்துள்ளது. அடுத்த கட்டமாக மேற்படி கூட்டணி என்ன தீர்மானத்தை எடுக்கப் போகிறது என்பதிலேயே வளைகுடாவின் அமைதியும் எதிர்காலமும் தங்கியுள்ளது எனலாம்.
Theme images by mammuth. Powered by Blogger.