தமிழர் கலவரத்தை தூண்டும் சில ஊடகங்கள் ...!


தற்போதைய இலங்கை இந்திய தமிழர் பிரச்சனைகள் மிகவும் மோசமாக காணப்படும் இந்த நிலையில் பல தமிழ் ஊடகங்கள் இனக் கலவரத்தை தூண்டும் முகமாக செய்தி தலைப்புக்களையும் பல செய்திகளையும் பிரசுரித்து தமது TRPயை உயர்த்த எண்ணியவண்ணம் செயற்பட்டுவருகின்றன. 
தமிழரிடையே உள்ள பிரச்சனைகளை வெளிக்கொணர பின்தங்கி நிற்கும் நீங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டி அவர்களது அழிவைக் காண துடிக்காதீர்கள் . 
இவ்வாறான செய்தி ஆசிரியர்களையும் ஊடகங்களையும் தமிழ் யாழ் இணையம் வன்மையாக கண்டிக்கின்றது.
முடிந்த பிரச்சனைகளை மீளக் கூறி அரசியலாக்க துடிக்கும் அரசியல்வாதிகளுக்கு உடன்போக்காதீர்கள் 
மக்களது பிரச்சனைகளை வெளிக்கொணர முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்: அப்பொழுது உங்களுக்கானதோர் தனி இடம் எப்போதும் மக்கள் மனங்களில் இருந்தே தீரும் 
எம் அன்பு வேண்டுகோளை செவிசாய்த்து மதிப்பளித்து மக்கள் மனங்களில் நீங்கா இடத்தை பெற்றிடுங்கள்.
தவறினால் உங்களுக்கான தமிழ் மக்களின் பார்வை வேறாக இருக்கும் என்பதில் ஐயமில்லை 
Theme images by mammuth. Powered by Blogger.