மட்டக்களப்பில் அதிரடிப்படையினர் மீது தாக்குதல்!

மட்டக்களப்பில் அதிரடிப்படையினர் மீது தாக்குதல்! 


அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு செங்கலடியில் மண் ஏற்றிக்கொண்டிருந்த இளைஞர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்த அதிரடிப்படையினர் நான்கு பேரை சுற்றி வளைத்து பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மண் ஏற்றிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்ததன் காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்களே இவ்வாறு நடந்துள்ளனர்.

மட்டக்களப்பில் அதிரடிப்படையினர் மூவரை சிறைப்பிடித்த பொதுமக்கள் இரண்டு அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இராணுவத்தினர் துப்பாக்கி சூடு பயத்தில் ஆற்றில் மூழ்கி இளைஞர் பலி!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

மட்டக்களப்பு செங்கலடியில் பாலாமடு ஆற்றில் மண் ஏற்றிக்கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள் இருவரை நோக்கி அவ்வழியே வந்த இராணுவத்தினரின் துப்பாக்கி சூடு நடத்தியதில் துப்பாக்கி சூட்டிற்கு பயத்தில் ஆற்றில் மூழ்கிய இரண்டு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நண்பகல் 12,45மணியளவில் செங்கலடியின் காயங்குடா கிராமத்திலிருந்து 2Km தூரத்திலுள்ள பாலமடு ஆற்றில் மண் ஏற்றிக்கொண்டிருந்த கொம்மாதுறை 10கட்டை சந்தியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணணும் தம்பியும் உழவு இயந்திரத்தில் மண் ஏற்றிக்கொண்டிருந்த வேளை அந்தப்பகுதியால் சென்ற இராணுவத்தினர் உழவு இயந்திரத்தை நோக்கி துப்பாக்கி சூட்டை நடத்த வேட்டுச்சத்திற்கு பயந்து ஆற்றில் பாய்ந்த போது தம்பியான ச.மதுசன் (17வயது) நீரில் மூழ்கி இறந்துள்ளார் .அண்ணணான கிசாந்தன் (19வயது)ஆபத்தான கட்டத்தை தாண்டி செங்கலடி வைத்தியசாலை சிகிச்சையிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செங்கலடி பிரதேச செயலக கிராமங்களான கரடியனாறு ,மரப்பாலம், கிதுல், உறுகாமம், போன்ற கிராம அபிவிருத்தி சங்கங்கள் பலதடவை இப்பகுதியில் ஆற்றுமண் கடத்தலை நிறுத்தச் சொல்லி இதுவரை ஆர்ப்பாட்டம் பண்ணியும் இதில் மண்கடத்தலை நடத்தும் கனகர வாகனங்கள் இலக்கம், உரிமையாளர் பெயர் கொடுத்தும் இவ் கறுத்தப்பால வழியால் செல்லும் அதிகாலை 5-7மணியளவில் பிறமாவட்டங்களுக்கு செல்லும் நேரங்களையும் துல்லியமாக கொடுத்தும் இதுவரை பொலிசார் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.