பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் இராஜினாமா!
பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் பதவியை நவாஸ் ஷெரீஃப் இராஜினாமா செய்துள்ளார்.
பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது நிரூபணமானதால், பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையை அடுத்து, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் சொத்து குவித்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அவர் மீது குற்றவியல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, நவாஸ் ஷெரீஃப் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

No comments