இஸ்ரேல் மீதான பிரதமர் மோடியின் பாசம்...!
2003ஆம் ஆண்டு இசுரேல் பிரதமர் ஏரியல் சேரோம் இந்தியா வருகை தந்தார். அப்போது அடல் பிகாரி வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர்கள் அவரை வரவேற்றனர். அப்போது நீரஜ் வாஸ்தவா என்ற பார்ப்பனர் "உலகத்திலேயே நாடு இல்லாத இனங்கள் இரண்டுதான்; ஒன்று யூதர்கள், மற்றொன்று பார்ப்பனர்கள். இப்போது யூதர்களுக்கு இசுரேல் நாடு கிடைத்து விட்டது. பார்ப்பனர்களுக்குத்தான் நாடு இல்லை." என்று சொன்னார்.
இசுரேல் இன்றளவும் இஸ்லாமியர்கள் மீது கடுமையான எதிர்மனப்பான்மையைக் கொண்ட நாடாகும், ஆகையால் தான் அமைதியை நாடும் எந்த ஒரு அரசியல் தலைவரும் இசுரேல் பயணத்தை மேற் கொள்வதைத் தவிர்த்தே வந்தனர்.
இசுரேலுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிதான்.
இசுரேலியர்களின் ஜீயோனிசமும் (Zionism), ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் இந்துத்துவக் கொள்கைகளும் ஒரே மாதிரியானவை, வெறித் தனம் கொண்டதாகும். பார்ப்பனர்களின் வேதக் கலாச்சாரத்துக்கும், யூதர்களின் இந்த 'ஜீயோனிசத்'துக் கும் ஒற்றுமை உண்டு என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்! எனவேதான் இந்த ஆர்.எஸ்.எஸ். பார்ப் பனர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே 'நெருக்கம்' அதிகமாகவே இருக்கிறது. இந்தக் கருத்தை ஆர்.எஸ்.எஸ். ஏடான 'ஆர்கனைசர்' ஏடே எழுதியதுண்டு.
இசுரேல் ஒருமுறை நடத்திய 6 நாள் யுத்தத்திற்குப் பிறகு "இசுரேலிய படைகள் எதிர்பாராத வெற்றி குவித் திருப்பதைப் பார்க்கும் போது, நமது கலாச்சாரமும் வெற்றி பெற்று உலகத்தில் நம்மை சரியான இடத்தில் கொண்டு போய் வைக்கப் போகிறது; அதற்கு இங்கே நமது ஆட்சி மலரவேண்டும்.. யூதர்கள் மதத்தின் மூலாதாரம் - நமது வேதங்களையும், இந்து தர்ம சாஸ்திரங்களையும் சமூக பழக்க வழக்கங்களையுமே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது." என்று எழுதியது ஆர்.எஸ்.எஸ். ஏடான 'ஆர்கனைசர்'.
வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது இசுரேல் நாட்டு வெளிவிவகார அமைச்சர் மோஷிதயான், இந்தியாவுக்கு ரகசிய பயணம் வந்தார். அவர் இந்தியாவில் பல இடங்களில் சென்று பார்வையிட்டு முரளிமனோகர் ஜோஷி, லால்கிருஷ்ண அத்வானி மற்றும் முக்கிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைச் சந்தித்தார். அவர் வந்து சென்ற பிறகுதான் ஊடகங்களில் அவர் வருகை வெளியானது, இந்த விவகாரம் இந்தியாவில் மட்டுமல்ல; உலக அரங்கிலேயே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்தியா - இசுரேலுக்கு எதிரான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்திருக்கிறது; அதுமட்டுமல்லாது, இசுரேலின் வெறித்தனமான போக்கை கூட்டுச்சேரா நாடுகள் எல்லாம் கண்டித்து வந்தன. இசுரேலுடன் நெருக்கம் கொண்டுவிட்டால் - அது இந்தியா ஏற்றுக் கொண்டுள்ள வெளிநாட்டுக் கொள்கைக்கு விரோதம் என்பது மட்டுமல்லாமல்; அரேபிய நாடுகளின் பகை மையையும் இந்தியா சம்பாதிக்கவேண்டியிருக்கும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய பிரச்சாரப் பேச்சிலேயே இஸ்லாமியர்கள் மீது நேரடியாக வன்மத்தைக் கொட்டித்தீர்த்தார்,
"இஸ்லாமியர்களும், கருப்பர்களும் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்" என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறினார். மேலும் தான் அதிபரானதும் அதிபர் மாளி கையில் இருந்த 4 இஸ்லாமிய அதிகாரிகளை அதிபர் மாளிகையில் இருந்து வெளியேற்றி அவர்களை ஆப்பிரிக்க நாட்டின் அமெரிக்க தூதரக அதிகாரிகளாக அனுப்பினார். இதனால் 4 இஸ்லாமிய அதிகாரிகளும் பதவி விலகிவிட்டனர்.
அதே போல் மோடியும் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இஸ்லாமிய வெறுப்பை அளவிற்கு அதிகமாக கொட்டிக்கொண்டிருக்கிறார். அவர் ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளிலும் பிரதமர் அலுவலகம் தரப்பில் வழங்கப்படும் இப்தார் விருந்தை ரத்து செய்தார். அதே போல் குடியரசுத்தலைவர் தரும் இப்தார் விருந்துக்கும் தான் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டார்.
கடந்த ஆண்டு அமீரகம் சென்ற மோடி இஸ்லாமிய நாட்டிற்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக் கும், அவர்களுக்கு எதிரான எந்த ஒரு செயலையும் செய்யாது என்று உறுதிகூறிய அவர், தனது உறுதி மொழிக்கு எதிராக இசுரேலுக்குச் சென்று அந்த நாட் டின் செயலுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார். இதன் மூலம் இனி வரும் காலத்தில் அரபு நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் உள்ள நட்பு கடுமையாக பாதிக்கப்படும் என்றே தெரிகிறது!
ஆர்.எஸ்.எஸ். உறவு எல்லை தாண்டிச் செல்லுகிறது. மாலேகான் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான மேனாள் இராணுவ அதிகாரி சிறீகாந்த் ரோகித் இசு ரேலுடன் சேர்ந்து இந்தியாவில் இந்துத்துவா ஆட்சியை அமைப்பதற்கான திட்டங்கள், வரைபடங்கள் அவரின் மடிக் கணினியில் இருந்ததையும் இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமானது.
