சசிகலாசிறையில் சகஜமாக உலாவரும் காட்சி ! வெளிவந்தது CCTV வீடியோ
சசிகலாசிறையில் சகஜமாக உலாவரும் காட்சி ! வெளிவந்தது CCTV வீடியோ
இதுக்குப் பெயர்தான் சிறைத் தண்டனையா.. சசிகலா வீடியோவைப் பார்த்து குழப்பத்தில் மக்கள்
பெங்களுரூ: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா வெளியே சென்று வரும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த மக்கள் இதற்கு பெயர்தான் சிறை தண்டனையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
கருப்பு சுடிதார் போட்டுக் கொண்ட சசிகலா, பெண் போலீஸ் உதவியுடன் கடைக்கு சென்றுவிட்டு சிறைக்கு திரும்பி வருவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சி தமிழக மக்களிடையே பல்வேறு கேள்விகளை மக்களிடையே எழுப்பியுள்ளது.
• சிறையில் இருந்து சர்வ சாதாரணமாக கைதிகள் வெளியில் போகலாமா?
• தினமும் வெளியில் போய் வருவதற்கு அனைத்து கைதிகளுக்கும் வாய்ப்புண்டா?
• அப்படி போகலாம் என்றால் இதற்கு பெயர் எப்படி சிறை தண்டனை?
• வெளியே செல்லும் சசிகலாவிற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படலாமா?
• பணம் கொடுத்தால் சிறையில் உள்ள கைதிகளுக்கு என்ன வேண்டுமானாலும் கிடைக்குமா?
• இதன் மீது நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க முடியாதா?
• இதுபோன்ற சலுகைகள் சாதாரண கைதிகளுக்கு ஏன் கிடைப்பதில்லை?
• ராம்குமார் போன்ற கைதிகள் சிறையில் சாகிறார்களே இதற்கு என்ன பதில்?
• பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் படு ஜாலியாக இருக்கிறார்களே அது எப்படி?
• செல்போன்கள் வைத்திருக்கும் கைதிகளை பிடித்து தண்டனை கொடுப்பது போல் சசிக்கும் தண்டனை உண்டா?
• பார்வையாளர் நேரத்தில் கூட கைதிகளுக்கு பிடித்த உணவை கொடுக்க விடாமல் தடுக்கும் சிறை நிர்வாகம் சசிகலாவிற்கு மட்டும் அனுமதி வழங்குவது எப்படி?
• இதற்கு பெயர்தான் பணபலமா?
• அப்படி என்றால் சட்டத்திற்கு மதிப்பில்லையா?