100ஆவது நாளை எட்டியுள்ள சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம்

வட மாகாண சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் வழங்கக்கோரி, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு முன்பாக மேற்கொண்டு வந்த போராட்டம் இன்று 100ஆவது நாளாகவும் தொடர்கிறது.


இதனை முன்னிட்டு அடையாள உண்ணாவிரம் ஒன்றினை இன்று காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுகாதாரத் தொண்டர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, நிரந்தர நியமனம் தொடர்பான கோரிக்கை அடங்கிய மகஜரொன்று வவுனியா மாவட்ட பிரதம கணக்காளர் அ.பாலகுமாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மன்னார் வீதியினூடாக பேரணியாகச் சென்ற அவர்கள், கோரிக்கை மகஜரினை வவுனியா பிராந்திய சுகாதாரப் பணிமனை பிரதி பணிப்பாளர் மகேந்திரனிடமும் கையளித்துள்ளனர்.
தொடர்ந்து, அவர்கள் பேரணியாக தமது போராட்ட களத்திற்குச் சென்று அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.