15 வயதில் திருமணம், 22 வயதில் "மிஸ்" இந்தியா, "மிஸ் யூனிவர்ஸ் 1952"... - இந்திராணி ரஹ்மான்!

1952 இந்தியா சார்பாக பங்கு பற்றி "மிஸ் யூனிவர்ஸ்"பட்டம் பெற்ற தமிழ் பாரம்பரிய பொண்ணு இந்திராணி

15 வயதில் திருமணம், 22 வயதில் "மிஸ்" இந்தியா, "மிஸ் யூனிவர்ஸ்"... - இந்திராணி ரஹ்மான்!

ஜூன் 28,1952ல் "மிஸ் யூனிவர்ஸ்" போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றார் இந்திராணி ரஹ்மான். இவர் இதே ஆண்டில் தான் மிஸ் இந்தியா பட்டமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திராணி 15 வயதிலேயே திருமணம் ஆனவர். குழந்தை பெற்ற பிறகு தான் இவர் "மிஸ்" இந்தியா பட்டமே வென்றார். இவர் "மிஸ் யூனிவர்ஸ்" போட்டியில் பங்கெடுத்த போது வயது 22. #1 இந்தியாவை சேர்ந்த பெண், அதுவும் தமிழ்நாட்டு பாரம்பரியத்தில் வளர்ந்த ஒருவர். தாய்மை அடைந்த ஒருவர்.. முக்கியமாக 1950-களில்... நீச்சல் உடையில் தோன்றுவாரா என்ற எண்ணம் பலருக்கும் எப்போது எழுந்து இருந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால், அந்தாண்டு "மிஸ் யூனிவர்ஸ்" போட்டியில் நீச்சல் உடை பிரிவில் அனைவரையும் காட்டிலும் மிக அழகாக தோன்றியவர் இந்திராணிதான்.

இந்திராணி அந்த கண்கள் தான் மற்ற 30 போட்டியாளர்களை விட மிகவும் அழகாக தெரிய முக்கிய காரணமாக இருந்தது. அதிலும், அவரது நெற்றி பொட்டு அழகின் உச்சமாக திகழ்ந்தது.
இந்திராணி சிறுவயதில் இருந்தே பரதம் கற்றுக் கொண்டவர். இவர் அழகி பட்டங்கள் வெல்வதற்கு முன்னரே மிக பிரபலமான பரதநாட்டிய கலைஞராக இருந்தார். 

பரதநாட்டியம் மட்டுமின்றி, குச்சிபுடி, கதகளி மற்றும் ஒடிசி போன்ற நடன கலைகளிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர். இவர் நடனம் பயில ஆரம்பித்தது 9 வயதில். 
15 வயதில் இவர் ஹபிப் ரஹ்மான் என்ற "ஆர்கிடெக்ட்" நபரை திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள். 
1969-ல் பத்மஸ்ரீ பட்டம் வென்றவர் இந்திராணி. மேலும், சங்கீத நாடக "அகாடமி" விருதும், தரக்நாத் தாஸ் விருதும் வென்றவர். 
இவர் பின்னாட்களில் இவரது தாயுடன் நியூயார்க் (1976) சென்று செட்டில் ஆகிவிட்டார். மேலும், அங்கு தொடர்ந்து பரதநாட்டியம் ஆடி, உலகம் முழுவதும் நிகழ்சிகள் நடத்தி வந்தார். 
1961-ல் தேசிய சுற்றுலா சென்று பரதம் ஆடினார். அதேபோல அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி மற்றும் ஜவஹர்லால் நேரு முன் வாஷிங்டன் டி.சி-ல் பரதம் ஆடியுள்ளார் இந்திராணி. 

மேலும், இந்திராணி பேரரசர் ஹைலே செலசஸி (Haile Selassie), ராணி எலிசபெத் இரண்டாம், மாவோ சேதுங், நிகிடா குருசேவ், மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ போன்றவர்கள் முன்னரும் பரதம் ஆடியுள்ளார்.1976-ல் நியூயார்க்கில் உள்ள ஜுல்லியார்ட் பள்ளியில் நடன பிரிவில் ஆசிரியராக இருந்தார்.

அமெரிக்காவின் ஹார்வர்ட் உட்பட பல பல்கலைகழகங்களில் இவர் நடனம் கற்பித்துள்ளார். இறக்கும் வரை உலகம் எங்கும் சுற்று பயணம் மேற்கொண்டு வந்தார்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.