வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் அதிரடிக் கைது.
வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் அதிரடிக் கைது.
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நல்லூர் மற்றும் கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸாரால் குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட ஐவரை தேடி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments