சமுர்த்தி பயனாளிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !! 3 தினங்­க­ளில் மட்­டும் 2000 துக்கு மேற்­பட்ட முறைப்­பா­டு­கள்

சமுர்த்தி நிவா­ர­ணம் கோரி மூன்­று­நாள்­க­ளில் 2 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் தமது முறைப்­பா­டு­களை பிர­தேச செய­ல­கத்­தில் கைய­ளித்­துள்­ள­னர் என்று பிர­தேச செய­ல­கத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

தென்­ம­ராட்சி பிர­தே­சத்­தில் சமுர்த்தி நிவா­ரண மீளாய்வு செய்­யப்­பட்ட பட்­டி­யல் கடந்த சனிக்­கி­ழ­மை­அ­னைத்து சமுர்த்தி அபி­வி­ருத்தி அலு­வ­லர் அலு­வ­ல­கங்­கள் கிராம அலு­வ­லர் அலு­வ­ல­கங்­க­ளில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டன.
இது தொடர்­பாக முறைப்­பாடு செய்­வோர் 15 தினங்­க­ளுக்­குள் முறைப்­பா­டு­களை பிர­தேச செய­ல­கத்­தில் ஒப்­ப­டைக்­கு­மாறு பிர­தேச செய­லர் அறி­வி­தி­ருந்­தார்.
வர­ணிப் பிர­தே­சத்­தில் சமுர்த்தி நிவா­ர­ணம் கிடைக்­கா­தோர் வரணி சமுர்த்தி அலு­வ­ல­கத்தை மூடி போராட்­டம் நடத்­தி­யி­ருந்த போதி­லும் ஏனைய பிரிவு மக்­கள் கடந்த திங்­கட்­கி­ழமை தொடக்­கம் முறைப்­பா­டு­களை பிர­தேச செய­ல­கத்­தில் கைய­ளித்­து­வ­ரு­கின்­ற­னர்.
கடந்த மூன்று தினங்­க­ளில் மட்­டும் 2 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட முறைப்­பா­டு­கள் கிடைத்­துள்­ளன. வழங்­கப்­பட்ட காலக்­கெ­டு­வுக்­குள் 5 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட முறைப்­பா­டு­கள் கிடைக்­க­லா­ மென எதிர்­பார்ப்­ப­தாக சமுர்த்­திப் பிரி­வி­னர் தெரி­வித்­த­னர்.
தென்­ம­ராட்சி பிர­தே­சத்­தில் சமுர்த்தி நிவா­ர­ணத்­துக்­குச் சுமார் 12 ஆயி­ரம் பேர் விண்­ணப்­பித்­தி­ருந்­த­னர். கொழும்பு சமுர்த்தி அபி­வி­ருத்­தித் திணைக்­க­ளத்­தால் விண்­ணப்­பித்த குடும்­பங்­க­ளுக்­கான புள்­ளி­கள் வழங்­கப்­பட்டு தெரிவு செய்­யப்­பட்ட 6 ஆயி­ரத்து 258 பய­னா­ளி­க­ளின் பெயர்­கள் பிர­தேச செய­ல­கத்­துக்கு அனுப்­பி­யி­ருந்­த­னர்.
தற்­போது கிடைக்­கும் முறைப்­பா­டு­க­ளுக்­க­மைய மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­பட்­டுத் தகு­தி­யா­ன­வர்­கள் தெரிவு செய்­யப்­ப­ட­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.
இதே­வேளை சமுர்த்தி அல­வ­ல­கங்­க­ளில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பட்­டி­யல் எதிர்­வ­ரும் ஒக்­டோ­பர் மாதம் வரை நடை­ மு­றைக்கு வர­வுள்­ளது. அது­வரை தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள பய­னா­ளி­க­ளுக்கு சமுர்த்தி நிவா­ர­ணம் வழங்­கப்­ப­டு­மென்­றும் செய­ல­கத்­தி­ன­ரால் தெரி­விக்­கப்­பட்­டது.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.