நாட்டின் வளங்களை இந்த அரசாங்கம் விற்று வருகிறது : மஹிந்த ராஜபக்ஷ
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்றபின்னர் அதனை நியாயப்படுத்த அரசாங்கம் முயல்கிறது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "நாட்டின் வளங்களை இந்த அரசாங்கம் விற்று வருகிறது. இதற்கு அம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்பட்டதே சான்று.
சங்ரிலா ஹோட்டல் அமைக்க அரச காணியை வழங்கியதாக எம்மீது குற்றஞ்சாட்டுகிறார்கள். சங்ரிலாவுக்கு வழங்கியதும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்கியதும் ஒன்றாக முடியுமா? பாரிய நிலப்பரப்புடன் துறைமுகம் விற்கப்பட்டுள்ளது" என்று மஹிந்த கூறியுள்ளார்.

No comments