யார் அறிவிலிகள் ? அற போராட்டம் என அழிவை வேடிக்கைபார்க்கும் இந்தியர்களா ? அழிக்கும் அரசியல்வாதிகளா ?
யார் அறிவிலிகள் ? போராட்டம் என்று அழிவை வேடிக்கைபார்க்கும் இந்தியர்களா ? அழிக்கும் அரசியல்வாதிகளா ?
இந்தியாவில் தற்போது இடம்பெறும் அழிவுகள் அனைத்தும் நாட்டின் பேரழிவு என அறிந்தும் அந்த நாட்டு மக்களும் இளைஞர் யுவதிகள் அனைவரும் எதிர்த்து பிரச்சாரம் செய்வதும் சமூக வலைத்தளங்களில் எதிரான செய்திகளை பிரசுரித்தல் எனவும் அழிவை பார்த்துக்கொண்டே இருக்க எது நடந்தாலும் எந்த கவலையும் இல்லை என அழித்துக்கொண்டே இருக்கும் அரசியல் வாதிகளும் என நாடு சின்னாபின்னமாகிவருகின்றது. இப்படி ஒருபுறம் இருக்கும் அழிவுகளை எந்த ஊடகமும் பொருட்படுத்தாமல் தமது தொலைக்காட்சிகளில் நாடகம் ,ஆபாச உடையுடனான நிகழ்ச்சிகள் , எதற்கும் பயனில்லாத செய்திகள் எனவும் உலக மக்களை இளித்தவாய்கள் ஆக்கிவருகின்றனர்.
தவறுகள் யார்மேல் என்ற விவாதம் முடிய முன்னரே நாடு முழுமையாக அழியப்போவது உறுதி. வேடிக்கை பார்ப்பதும் ஓர் அளவிற்கே வேண்டும் . தற்போது அழிவின் உச்சத்தை அடைகிறது இந்தியா . தவறுகள் மக்கள் மீது மட்டுமே உண்டு. உங்கள் அமைதி முறையான போராட்டங்கள் எதனையும் நிறுத்தப்போவதில்லை. புரிந்து செயலாற்றுவது மக்களின் ஒற்றுமையிலும் வீரத்திலும் மட்டுமே தங்கியுள்ளது. எதிர்கால சந்ததியை நினைவில் கொண்டு செயற்படவேண்டியது அணைத்து மக்களின் தலையாய கடமை என்பதை மறவாதீர்

No comments