போதனாவைத்தியசாலையின் அவசரசிகிச்சைப்பிரிவிற்குள் தென் இந்திய திரைப்பட குழு - சலசலப்பில் ஈடுபட்ட நோயாளிகளின் உறவினர்
யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவிற்குள் புகுந்து விழையாடிய கமராக்களினால் சுமார் 4 மணித்தியாலங்கள் அமைதியின்மை நிலவியதாக தெரியவருகின்றது.
இரவு 6.30 மணியில் இருந்து சுமார் 11 மணிவரை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
யாழ் போதனாவைத்தியசாலையின் அவசரசிகிச்சைப்பிரிவிற்குள் தென் இந்திய திரைப்பட குழுவினருடன் இணைந்து இலங்கையின் கலைஞர்களும் அனல் எனும் திரைப்பட காட்சிகளை எடுத்துக்கொண்டு இருந்துள்ளனர்.
இதேவேளை, பருத்தித்துறையில் இருந்து நோயாளர் ஒருவர் பீடைநாசினியை குடித்த நிலையில் அவசர சிகிச்சைப்பிரிவிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரிற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளபட்டிருந்த நிலையில் அவரின் உறவினரான வெளிநாட்டு பிரஜை ஒருவர் இவர்களின் செயற்பாட்டை அவதானித்துள்ளார்.
தன்னை உள்ளே அனுமதிக்கவிடாது உள்ளே படம் எடுக்கிறீர்களோ என அவர் பதட்டமடைந்த நிலையில் ஏனைய நோயாளிகளின் உறவினர்களும் இதனை அவதானித்து சலசலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியசாலையுடன் நாம் தொடர்புகளை மேற்கொண்டபோது, தகவல் உண்மையானது என்றும் ஆனால் படப்பிடிப்பானது தனிப்பட்ட ஒரு அறைக்குள் இடம்பெறுவதாகவும் இதனால் நோயாளிகளிற்கு எதுவித இடையூறுகளும் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவசர சிகிச்சை பிரிவினுள் தொற்றுக்கள் உட்புகாதவாறு தடுக்க பாதணிகளை அகற்றுதல்,பார்வையாளர்களை அனுமதிக்காது தவிர்த்தல்/ மட்டுப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் கடைப்பிடிக்க பட்டு வருகின்றன.
இவ்வாறான சூழ்நிலையில் எவ்வித சுகாதார அறிவும் இல்லாத 30 பேர் கொண்ட ஒரு கூட்டம் பாதணிகளுடனும் பொதிகளுடனும் படப்பிடிப்பு உபகாரணங்களுடனும் குறைந்தளவே இடவசதியுள்ள அவசர சிகிச்சை பிரிவினுள் அங்கும் இங்குமாக கூச்சலிட்டபடி திரிந்து நோயாளர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்த அனுமதி எவ்வாறு வளங்கப்பட்டது.
வைத்தியசாலை ஊழியர்களையே தொடுதிரை தொலைபேசிகள் உபயோகிப்பத்தை தவிர்க்குமாறு துண்டு பிரசுரம் ஒட்டிய பணிப்பாளர் இப்படியான செயலிற்கு அனுமதியை எவ்வாறு வளங்கினார் என்பது கேள்விக்குரிய விடயமாகும்.
அத்துடன் உண்மையான நோயாளர்களை உள்ளே வைத்துக்கொண்டு பட பிடிப்பு செய்வது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல.இதனுடன் நோயாளிகள் சம்மந்தபடாவிட்டாலும் வெளியில் நிற்கும் உறவினர்களின் மனநிலையையும் சற்று சிந்தித்திருத்தல் வேண்டும்.
அவசர சிகிச்சை பிரிவினுள் உறவுகளை அனுமதித்து விட்டு கனத்த நெஞ்சத்துடனும் பதட்டத்துடனும் வெளியே நோயாளியின் உதவிக்காக காத்து நின்றவர்களை கூத்தாடிகளின் வேலையை பாதிப்பதாக கூறி வெளியே துரத்தியது மனிதாபிமானம் அற்ற செயலாகும் .
இதேவேளை. இது பற்றி நியாயம் கேட்ட வைத்தியசாலை நோயாளர்களின் உறவினர்கள் இருவரை பொய்யான முறைப்பாட்டில் போலிசாரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இதுதொடர்பாக வினாவியபோது,கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜை வைத்தியசாலை பணிப்பாளருடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது.
எங்களை மட்டும் களட்டிவிட்டு போக சொல்கின்றார்கள் இவர்கள் போகலாமா என அவர் வினாவியபோது இது அவசரசிகிச்சை பிரிவு..அவசர அவசர நிலையில் இதை அவதானிக்கமுடியாது என பதில் கிடைத்துள்ளது. ஆனால் காலம் காலமாக உள்ளேயுள்ள நோயாளர்களை பார்வையிடும் உறவினர்கள் வெளியே கழற்றிவிட்டுத்தான் செல்கின்றனர் என்பது உண்மை.
வைத்திய சாலையில் நோயாளர்களுக்கு இரண்டாம் பட்சமும் கூத்தாடிகளுக்கு முதலிடமும் கொடுத்த செயலானது மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும். இதுபோல செயல் ஆனது மக்களின் பார்வையில் போதனா வைத்திய சாலையின் மீதுள்ள நம்பிக்கையை மோசமடைய செய்து மக்களை தனியார் வைத்தியசாலையின் பக்கம் திசைதிருப்புவதாக அமைகிறது என வைத்திய சாலை சமூகம் தெரிவிக்கின்றது.
No comments