ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
ஜக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சற்றுமுன்னர் கையளிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த எதிர் கட்சியை சேர்ந்த 34 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான இந்த நம்பிக்கை இல்லா பிரேரணை பாராளுன்ற செயலாளரிடம் கையளிக்கப்ட்டுள்ளது.
அமைச்சர் ரவி கருணாநாயக்கா ஊழல் மோசடி பிரச்சினையில் நாம் எவ்வாறு தலையீடுவது" பைசர் முஸ்தபா
அமைச்சர் ரவி கருணாநாயக்கா தொடர்பில் தேசிய அரசாங்கத்தில் இருந்துகொண்டு கருத்து தெரிவிக்க முடியாது. எமது கட்சியின் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து நாம் விவாதிக்க முடியும் எதிர்வீட்டு பிரச்சினையில் நாம் எவ்வாறு தலையீடுவது என அமைச்சர் பைசர் முஸ்தபா கேள்வி எழுப்பினார். இந்த அரசாங்கத்தில் மாத்திரமல்ல சகல அரசாங்கத்திலும் கள்ளர்கள் இருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments