யாழ் மக்களே எச்சரிக்கை ...! இன மத மொழி ஜாதி பிரச்சனைகளுக்கான விதை யாழ் மண்ணில் தூவப்படுகின்றது
அண்மைக்காலங்களில் யாழ் மண்ணில் பல்வேறு பிரச்சனைகள் முடிவுக்கு வந்து சுமுகமான நிலை தோன்றியது என எல்லோரும் எண்ணியிருந்த போதும் தற்போது உச்சகட்ட பிரச்சனைகளை மக்கள் எதிர்கொள்ளவேண்டிய சூழலே தோன்றிவருகின்றது.
வாள்வெட்டு , போலீஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல் , சிறு சிறு ரவுடி கும்பல்கள் என ஒருபுறம் கலவரங்கள் நிகழ
மறுபுறம் மதக் கலவரங்களும் இனக் கலவரங்களும் சில சமூக விரோதிகளால் தூண்டப்படுவந்தன.
இதையெல்லாம் தாண்டி தற்போது வடமாகாணத்தில் ஜாதி பிரச்சனை துளிர்விட ஆரம்பித்துள்ளது. வடமாகாண மக்களின் மிக முக்கிய பலமான ஒற்றுமையை குலைக்க இவ்வாறான ஜாதி பிரச்சனைகள் சமூக விரோதிகளால் தூண்டப்படுகின்றது.
குறித்த ஜாதியின் / மதத்தின் / மத குறியீடுகளினை பயன்படுத்தி முரணான செய்திகள் சில சமூக விரோதிகளால் வெளிவருவதனால் அது குறித்த மக்களை பாதித்து அவர்கள் எதிரான செயலை மேற்கொள்ள ஆரம்பிக்கின்றனர்.
குறித்த அந்த செய்தியை எதிர்க்கும் நோக்கில் அவர்களும் எதிரான செய்தியை கூறுவது என்ற பெயரில் குறித்த மக்கள் கூட்டத்தை தாழ்த்தியும் ஏசியும் தமது கருத்துக்களை பகிர்கின்றனர்.
இந்த நிலை தொடரும் பட்ச்சத்தில் யாழ் மக்கள் தற்போது சிறு சிறு குழுக்களாக பிரிவடையும் நிலை உருவாகியுள்ளது.
இது தற்போதைய யாழ் மக்களின் ஒற்றுமையை கலைக்க தொடங்கியுள்ளதை மக்கள் உணரவேண்டிய தேவை உள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் சமூக விரோதிகள் சிலர் அங்கிருந்தவண்ணம் எமது நாட்டின் அரசியல் சமூக பிரச்சனைகளுக்கு கருத்து தெரிவிப்பது என்ற பெயரில் தமது சமூக வலைத்தளங்களில் செய்திகளை பிரசுரிப்பதனாலேயே அதிகளவான சமூக பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன.
இதற்கு சட்ட வல்லுநர்கள் , அரச அதிகாரிகளால் மாத்திரம் தீர்வு காண முடியாது. ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து இவ்வாறான சமூகத்தை சீரழிக்கும் செய்திகளை விலக்கி புரிந்துணர்வுடன் செயற்பட்டால் மட்டுமே இவ்வாறான பிரச்சனைகளை குறைக்க முடியும்
ஒற்றுமையே பலம்
இதை அறிந்த எதிரிகள் அதை குலைக்க எண்ணுகின்றார்கள்
எச்சரிக்கை மக்களே ...!
செய்தி ஆசிரியர்
ஞா. நிரோஜன்

No comments