உயர்தர பரீட்சையுடன் தொடர்புடைய வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையுடன் தொடர்புடைய வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை இந்த தடை அமுலில் இருக்கும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த காலப்பகுதியில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் கையேடு விநியோகிக்கும் நடவடிக்கை ஆகியவற்றுக்கும் பரீட்சைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது.
இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments