வெகு சிறப்பாக நடைபெற்ற கவிஞர் றஜித் அவர்களின் நல்லூர் கார்த்திகை குமரா போற்றி இசை வெளியீடு
கவிஞர் றஜித் அவர்கள் வருடா வருடம் நல்லூர் கந்தன் உட்ச்சவ தினங்களில் கந்தனை போற்றி பாடல்கள் வெளியிடுவது குறித்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த வருடம் இசை வெளியீடு சிறப்பாக நெறிப்படுத்தப்பட்டு நல்லூர் ஆலய சுற்றுப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆறுமுகநாவலர் மணிமண்டபத்தில் வெளியிடப்பட்டது.
இவ் வெளியீட்டு விழாவில் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன் அவர்களும் , பிரபல தொழிலதிபர் கிருபா வாகன பயிற்சி பாடசாலை உரிமையாளர் கிருபாகரன் அவர்களும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அந்த வகையில் கவிஞர் கௌரவிப்பு மற்றும் பாடகர்கள் கௌரவிப்பு மற்றும் இசையமைப்பாளர்கள் கௌரவிப்பினை தொடர்ந்து இசை வெளியீடு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து விருந்தினர் உரைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று கார்த்திகை குமரா போற்றி இசை வெளியீடு இனிதே நிறைவுற்றது.

















No comments