நம் கண் முன்னே அடுத்தடுத்து கிடைக்கும் தமிழர் நாகரிகம்
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டுஅருகே சாஸ்திரம்பாக்கத்திலும், பழவேரிமலையிலும் ஆதிச்சநல்லூரில்கண்டுபிடிக்கப்பட்டது போல பல்லாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட அரியவகை முதுமக்கள் தாழிகள் ஏராளமாக புதையுண்டு கிடக்கின்றன. அங்கு ஆதிச்சநல்லூரில்காணப்படும் அதே வகையிலான அரிய வகைஇடுகாடு சாஸ்திரம்பாக்கம் மலைகளைசுற்றி பல காணப்படுகிறது.
இறந்தவர்களை முதுமக்கள்தாழிகளில் வைத்து புதைத்து விட்டு அதை சுற்றி சிறு சிறு பாறைகளை கொண்டு வட்ட வடிவமாக அடுக்கி அதன் நடுவில் பெரிய பாறைகள் கொண்டு நினைவுச் சின்னங்கள் அமைத்து கற்படைவட்டங்கள் அமைக்கபட்டுள்ளது.
இதை போல் அப்பகுதியில் இருக்கும் அணைத்து மலைகளிலும் பலகற்படை வட்டங்கள் இருக்கின்றது.
அங்கு இரும்பு உருக்காலைகள் இயங்கியதற்கான சான்றாக இரும்புக்கழிவுகளுடன் கூடிய மண்களும், கற்கலும் காணப்படுகின்றன. அக்கழிவுகளுடன் உமியின் அடையாளங்களுடன் காணப்படுகிறது.
மருந்துகளை அரைக்க உரல்கள் பாறையில் செதுக்கபட்டிறுகிறது.
மேலும் பழங்கால தாய் தெய்வ கற்சிலை ஒன்று காணப்படுகிறது. அப்பகுதிமக்களால் அனிச்சியம்மன் என்று வழி படுகிறது.
சாஸ்திரம்பாக்கம் பகுதியில் கடந்த 30ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் பணிக்காகதோண்டியபோது, முதுமக்கள்தாழி பல கண்டெடுக்கப்பட்டதும் அதைத் தொடர்ந்து இப்பகுதியில் இனியாரும் தோண்டக் கூடாது என்று உத்தரவிடப் பட்டிருக்கிறது.
தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லுாரில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை பிரதிபலிக்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதே போல பாலாற்றுக் கரையில் பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்ததற்கான பல அரிய சான்றுகள்புதையுண்டு கிடைக்கின்றது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தகற்படைவட்டங்கள் கூட இப்போது இல்லை. ரியல்எஸ்டேட் என்ற பெயரில் ஆக்கரமிக்கப்பட்டுள்ளது என்று தோழர் வெற்றித்தமிழர் கூறினார்.
தமிழக அரசு இப்பகுதியில் ரியல்எஸ்டேட்டுக்கு தடைவிதித்து அகழ்வாய்வுக்குஉத்தரவிட்டால், தமிழர்களின் இன்னும் பலஅரிய தகவல்களை உலம் அறிய செய்யலாம்.
இல்லாத சரஸ்வதி நதியை தேட பல ஆயிரம் கோடி செலவு செய்யும் ஆரிய இந்திய அரசு, நம் கண் முன்னே அடுத்தடுத்து கிடைக்கும் தமிழர் நாகரிக பெருமித கண்டு பயம் கொண்டு ஆரிய இந்திய அரசு தமிழர்களின் அகழவாய்வு நடைபெறாமல் தடுத்துக் கொண்டே இருக்கிறது.
ஆரிய இந்நியாவில் தமிழர்களின் பல்லாயிரக் கணக்கான தடயங்களை வெளி கொண்டுவர முடியாது என்பதற்கு சாஸ்திரம்பாக்கமும் ஒரு சான்றாகவே நம் முன் இருக்கிறது.







No comments