முட்டை ஓட்டை கீழே போடுவதற்கு முன் இதை கொஞ்சம் படிங்க...

பொதுவாக அனைவரும் முட்டைகளை சாப்பிட்டு ஓடுகளை தூக்கி போட்டுவிடுவோம். ஆனால் முட்டையின் ஓட்டிலேயே அதிக சத்துக்கள் உள்ளது.

முட்டை ஓட்டினால் என்ன என்ன பயன் என்று தெரிந்தால் கட்டாயம் அதை நாம் தூக்கி போடவே மாட்டோம்.
முட்டை ஓட்டில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளது. இது மிக எளிதாக செரித்து, கால்சியம் ஊறிஞ்சி கொள்ளப்படுகிறது.
இதில் உள்ள அதிகளவு கால்சியமானது பல் மற்றும் எலும்பு வலுப்பெறவும், அவை வளர்ச்சியடையவும் உதவுகிறது.
முட்டை ஓடுகள் இரத்த அழுத்தத்தினை குறைக்கவும், கொழுப்பின் குறைக்கவும் உதவுகிறது.
தினமும் நாம் அரை ஸ்பூன் முட்டை பவுடரை உட்கொண்டால் நம் அன்றாட தேவைக்கான கால்சியத்தில் 90 சதவீதம் கிடைத்துவிடும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
முட்டை ஓட்டினை முகத்தில் தேய்க்கும் போது சருமமானது மென்மையாகிறது.
முட்டை ஓட்டில் உள்ள கால்சியமானது உடலுக்கு மட்டுமல்லாது தோட்டத்தில் உள்ள தாவரங்களுக்கும் நல்ல உரமாகும்.
முட்டை ஓட்டினை உடைத்து அதனை வினிகருடன் கலந்து வீட்டில் தரையில் மற்ற இடங்களில் படிந்திருக்கு கரைகளை எளிதாக அகற்றலாம்.
முட்டை ஓட்டினை நன்கு அரைத்து நம் வீட்டில் வளர்க்கப்படும் நாய் போன்ற விலங்குகளுக்கு கொடுக்கலாம். இதன் மூலம் அவற்றிற்கு தேவையான கால்சியசத்தானது கிடைக்கும்.
காபி கலக்கும் போது அதனுடன் சிறிது முட்டை ஓட்டின் பவுடரை சேர்த்தால் அதில் உள்ள கசப்பு தன்மையானது குறைந்து இனிப்பு சுவை அதிகரிக்கும்.
தாவரங்களை முட்டை ஓட்டில் வளர்த்து நட்டால் அவை எளிதில் மட்கி அவற்றிற்கு உரமாகவும் மாறும்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.