வறட்சி காலங்களை நினைவில் கொள்ளுங்கள் மழை நீருக்கு மதிப்பளியுங்கள்
வறட்சி காலங்களை நினைவில் கொள்ளுங்கள் மழை நீருக்கு மதிப்பளியுங்கள்
மக்களே ..!
கடந்தகாலங்களில் எமது மக்களில் பலர் குடிநீர் பற்றாக்குறை காரணமாகவும் வறட்சி காரணமாகவும் பாதிக்கப்பட்ட நிலை யாவரும் அறிந்த ஓர் விடயம். இவ் வறட்சி காரணமாக 50000 குடும்பங்களிற்கு மேல் பாதிக்கப்பட்டிருந்தார். அரசியல் , சமூகநல மற்றும் உலக நாடுகளின் சேவை நிறுவனங்கள் பலவற்றாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவைகள் கணிசமான அளவே வழங்கப்பட்டிருந்தது. இவற்றுற்கு முக்கிய காரணமாக நிலத்தடி நீர் பற்றாக்குறை என்பதே எல்லோராலும் கூறப்பட்ட விடயம்.
அந்தவகையில் நெடுந்தீவு , காரைநகர் போன்ற பிரதேசங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு அங்குள்ள கால்நடைகள் யாவும் இறக்கும் நிலை தோன்றியிருந்தது. அந்த சமயத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து குடிநீர் விநியோகம் அப் பிரதேசங்களிற்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையை சற்றே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
எமது யாழ் மண் சுத்தமான நிலத்தடி நீர்வளத்தைக் கொண்ட சுண்ணக்கல் பிரதேசம் இருப்பினும் கடந்தகாலங்களில் குடிநீர் பற்றாக்குறையால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது.
இவற்றிற்கான காரணங்கள்
1 கட்டடங்களின் பெருக்கம்
2 தாவர அழிப்பு
3 மண் அகழ்வு
என்ற நகரமயமாதல் செயற்பாட்டை கூறலாம். இவற்றை தவறு என்று கூற முடியாது . இருப்பினும் இயற்கை நமக்கு தரும் கொடையான மழைநீரை தகுந்த முறையில் நிலத்தடி நீராக சேகரித்தால் குறித்த சில காலம் நாம் நிலத்தடி நீர் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
ஆகவே மழைநீரினை கால்வாய்கள் ஊடாக கடல்நீருடன் கலக்க விடாது உங்களது நிலங்களில் , குளம் , கிணறுகளில் சேகரித்து எதிர்கால சந்ததி நலன் பெற வழிவகுத்துக் கொடுங்கள்.

No comments