அவுஸ்ரேலியாலில் இருந்து இலங்கையர்கள் நாடுகடத்தல்

அவுஸ்ரேலியாவிலிருந்து 13 இலங்கையர்கள் விசேட விமானமூலம் நாடுகடத்தப்பட்டனர். இவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக விமான நிலைய பொலிசார் தெரிவித்தனர். குறித்த 13 பேரும் நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கடந்த 2012ம் ஆண்டு இலங்கையில் நீர்கொழும்பு , சிலாபம் போன்ற கடல் பகுதிகளில் இருந்தும் மற்றும் விமானமூலம் இந்தியாவிற்குச் சென்று அங்கிருந்தும் படகுமூலம் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் சென்றுள்ளனர்.
இவர்களை அவுஸ்ரேலியா பொலிசார் தடுப்பு முகாமில் தடுத்துவைத்துள்ள நிலையில் விசேட விமான மூலம் இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதா பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.