நயினாதீவு தனியார் படகு உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் : நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் பின்னடிப்பு .
நயினாதீவு தனியார் படகு உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் பின்னடிப்பு .
தென்னிலங்கையை சேர்ந்த தனியார் நிறுவனத்தினால் நயினாதீவிற்கு கொண்டுவரப்பட்டு அதிக பணத்தில் இயக்கப்படும் சொகுசுப் படகினை நிறுத்தக்கோரியும் தமது வாழ்வாதாரத்தை உறுதி செய்யக்கோரியும் நயினாதீவு தனியார் படகு உரிமையாளர்கள் நியாயமான சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இவ் விடையம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்ட போதும் இது விடையம் சம்பந்தமாக விரைந்த நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரிகளும் முன்வரவில்லை என படகு உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .
இவ் விடையம் தொடர்பாக வேலனை பிரதேச செயலகத்தால் நேற்று( 02.08.2017) அனுப்பிவைக்ப்பட்டுள்ள கடிதத்தில் எதிர்வரும் 09.08.2017அன்று நயினாதீவு தனியார் படகு உரிமையாளர்கள் சங்கத்தினருடன் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .
இவ் காலந்தாழ்த்தப்பட்ட அழைப்பானது நயினை மக்கள் தமது அன்றாட வாழ்க்கைத்தேவைகளை சிறந்த முறையில் நிறைவேற்ற அதிகாரிகள் விரும்பவில்லை என்பதனையே சுட்டி நிற்பதாக நாம் கருதுகின்றோம்
அதுவரையானா காலப்பகுதிவரைக்கும்.
படகு சங்கத்தினர் மேற்கொள்ளும் நியாயமான பணிப்புறக்கணிப்புக்கு செயலகத்தினர் ஆதரவு வளங்குகின்றார்களா?
அவ்வாறில்லாதுவிடின் நயினை மக்களின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதை விரும்புகின்றார்களா?
அவசரமான விடையம் ஒன்றினை உடனடியாக தீர்க்கப்படவேண்டிய விடையத்தினை காலம் தாழ்த்துவது ஏன்?
படகு உரிமையாளர் சங்கத்தினரின் நியாயமான சேவைப்புறக்கணிப்பால் நயினை மக்கள் தங்களது அன்றாட தேவைகளை சிறந்த முறையில் பூர்த்தி செய்யமுடியாதுள்ளது என்பதுடன் படகு சேவையில் ஈடுபடும் நயினை இளைஞர்கள் தொழில் இன்மையால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறிக்குள்ளாகியுள்ளது.
இது விடையம் தொடர்பாக உரிய அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு நயினையில் இயல்பு நிலையினை வழமைக்கு கொண்டு வருவதுடன் படகு உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கான சரியான தீர்வினை விரைந்து வளங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் .


No comments