பயணிகள் பஸ்களுக்கு பிரத்தியேக பாதை : மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க
பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் பிரத்தியேக வீதி ஒழுங்கை (Lane) முறைகள், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட வுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லை, இசுறுபாயவில் உள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மொரட்டுவையில் இருந்து கொழும்பு வரையும் பத்தரமுல்லையிலிருந்து கொழும்பு வரையும் மூன்று ஒழுங்கைகள் கொண்டதாக இத்திட்டம்
நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வாரநாட்களில் காலை 6 மணிமுதல் காலை 9 மணிவரை செயற்படுத்தப்படுவதோடு, பிரத்தியேக ஒழுங்கையில் தனியார், இ.போ.ச. பஸ்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வான்கள் என்பன பயணிக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments