வவுனியாவில் மாணவனுக்கு கத்திக்குத்து; வாளுடன் ஒருவர் கைது

வவுனியா தேக்கவத்தை பகுதியில் வாளுடன் நின்ற ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று மாலை வவுனியா, தேக்கவத்தை பகுதியில் வசிக்கும் 25 வயது குடும்பஸ்தரே இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது வீட்டில் இருந்து வில்லுத்தகடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் 21.5 அங்குளமுடைய வாளொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு வந்து தொழில் புரிந்து வந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் மாணவ குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்ற நிலையில் ஒரு மாணவனுக்கு சிறிய ரக கத்தியால் மற்றைய மாணவன்வெட்டியதில் காயமடைந்த மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.