இன்று “சந்திர கிரகணம்”...முழு நிலவை வெறும் கண்களால் பார்க்கலாமா..

இன்றைய தினம் வானில் நிகழும் சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என, இந்திய வான் இயற்பியல் ஆய்வக விஞ்ஞானி செல்வேந்திரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நேரப்படி இன்றிரவு 9 மணி ஐம்பத்து இரண்டு நிமிடங்களுக்கு நிலவின் மீது பூமியின் நிழல் விழத் தொடங்குகிறது.
சந்திர கிரகணத்தின்போது தோன்றும் முழு நிலவை தென்னிந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஆகஸ்ட் மாதம் 21 ம் தேதி, வட அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது.
மேலும் வரும் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணம், தமிழகத்தின் வழியாக கடந்து செல்லும் என இந்திய வான் இயற்பியல் ஆய்வக விஞ்ஞானி செல்வேந்திரன் கூறியுள்ளார்.
டிசம்பர் 26 ஆம் தேதி தோன்றும் முழு சூரிய கிரகணமானது தென் தமிழக நகரங்களான, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் வழியாக கடக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.