ஒரே வாரத்தில் அழியப்போகும் உலகம்? மூன்றாம் உலகப்போரின் ஆரம்பமும், அதன் பின்னணியும்!
சமகாலத்தில் அனைவரது மனதிலும் மூன்றாம் உலகப் போர் பற்றிய கேள்வியே எழுந்துள்ளன. எங்கே, எப்போது, எந்த சூழ்நிலையில் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும் என்பதே அனைவரதும் கேள்வியாகும்.
இது இன்று நேற்று வந்த எழுந்த ஒரு கேள்வியல்ல. இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் மூன்றாம் உலகப் போரை பற்றிய கேள்விகள் எழுந்து விட்டன.
இந்த கேள்வியானது அமெரிக்க, ரஷ்ய நாடுகளுக்கு இடையிலான மோதலின் போது சற்று பலமாக எழும்பியிருந்த நிலையில், பின்னர் இந்த கேள்வி தணிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது மூன்றாம் உலகப் போர் பற்றிய கேள்வியும், அது குறித்த எதிர்வு கூறல்களும் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், யார், எங்கே, எப்போது மூன்றாம் உலகப் போரை ஆரம்பித்து வைக்கப் போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
எதிர்பார்ப்போடு யாரும் மூன்றாம் உலகப் போரை பற்றி கேள்வி கேட்கவில்லை. மாறாக எதிர்காலம் பற்றி பயத்துடனேயே இந்த கேள்வியை எல்லோரும் கேட்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது.
காரணம் மனித குல வரலாற்றையே முடித்து வைக்கும் ஆற்றல் இந்த மூன்றாம் உலகப் போருக்கு இருப்பதாக சொல்லப்படுகின்றது. அத்துடன், அனைத்து போரையும் மூன்றாம் உலகப் போர் முடிவுக்கு கொண்டு வரும் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், இரண்டாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வந்தது அணு குண்டுதான். எனினும், இங்கு மூன்றாம் உலகப் போரை அணு குண்டுதான் ஆரம்பித்து வைக்கப் போகின்றது.
சமகாலத்தில் முழு உலகத்தையும் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில். உலக நாடுகள் பலவும் மூன்றாம் உலகப் போருக்கு தயாராகி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.
குறிப்பாக இம்முறை ஆசிய கண்டத்திலேயே போர் மேகம் சூழ்ந்திருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்தியா, பாகிஸ்தான், சீனா என ஆசிய நாடுகளை பலவற்றையும் போர் மேகம் சூழ்ந்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி, மூன்றாம் உலகப் போரை முன்னின்று நடத்தப் போகின்றவர்களாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்திய பிரதமர் மோடி மற்றும் வடகொரிய ஜனாதிபதி Kim Jong-un ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டு வருகின்றது.
அதிலும், குறிப்பாக வடகொரியாவின் அண்மைக் கால செயற்பாடுகள் முழு உலக நாடுகளையும் உறைய வைத்துள்ளது. ஐந்து முறை அணு ஆயுத ஏவுகணைகளையும் வெற்றிகரமாக இந்த நாடு பரிசோதித்துள்ளது.
அந்த வகையில், மூன்றாம் உலகப் போருக்கு வடகொரியாவே பிள்ளையார் சுழி போடும் என கூறப்படுகின்றது. காரணம் 1950ஆம் ஆண்டு இடம்பெற்ற கொரிய யுத்தத்தின் போது வடகொரியா மீது அமெரிக்க வான்வெளி தாக்குதலை நடத்தியிருந்தது.
இந்த தாக்குதலின் போது 20 வீதமான வடகொரிய மக்கள் கொல்லப்பட்டனர். அதாவது ஐவரில் இருவர் என்ற ரீதியில் உயிரிழந்தனர். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக வடகொரியா தனது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
இந்நிலையிலேயே, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் குவாங்க் தீவு மீது தாக்குதல் மேற்கொள்ள போவதாக வடகொரியா அறிவிப்பு விடுத்துள்ள நிலையில், அமெரிக்கா அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் சீனா அண்மையில் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, "வடகொரியா அமெரிக்கா மீது முதலில் தாக்குதல் நடத்தினால் நடுநிலை வகிக்கப் போவதாகவும், மாறாக வடகொரியா மீது அமெரிக்கா முதலில் தாக்குதல் நடத்தினால் தட்டிக்கேட்கப் போவதாகவும்" சீனா அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு ஆசிய நாடுகளுக்கு இடையில் போர் பதற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய, அமெரிக்க விடயத்தில் சீனா தலையிடுமாக இருந்தால் இந்தியா அதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
காரணம் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் இராணுவ உடன்படிக்கை இருக்கின்றது. அத்துடன், ஏற்கனவே இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் மோதல் வலுப்பெற்றுள்ளது.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் வெடிக்கலாம் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர். அவ்வாறு இந்தியா மற்றும் சீனா மோதிக் கொள்ளுமாக இருந்தால் பாகிஸ்தான் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில், காஷ்மீர் ஊடாக பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் மேற்கொள்ள கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கொண்டு பார்க்கும் போது மூன்றாம் உலகப் போர் விரைவில் ஏற்படும் என சொல்லப்படுகின்றது.
யார் முதலில் தாக்குவார்கள் என்பதே தற்போது உலக மக்களிடத்தில் எழுந்துள்ள கேள்வியாக இருக்கின்றது. இவ்வாறான நிலையில் மூன்றாம் உலகப் போருடன் தொடர்புடைய நாடுகள் பற்றி அதிர்ச்சியான செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது.
அதாவது, "இந்த மூன்றாம் உலகப் போருடன் தொடர்புபடுத்தி பேசப்படும் அனைத்து நாடுகளிடமும் அணு குண்டு இருப்பதாக சொல்லப்படுகின்றது."
இந்த தகவலே தற்போது உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில், மூன்றாம் உலகப் போர் தொடர்பிலான எதிர்வு கூறல்கள் அவ்வாறு அமைந்துள்ளன.
காரணம், இந்த ஆண்டிற்குள் மூன்றாம் உலகப் போர் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பல்கேரியன் நாட்டை சேர்ந்த பாபா வாங்கா மற்றும் ஹொராசியோ வில்லேகாஸ் எனும் மறைஞானி போன்றவர்களின் எதிர்வு கூறல் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இவர்கள் இந்த ஆண்டிற்குள் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும் என கூறியுள்ளனர். இவர்களின் எதிர்வு கூறல் பலவும் நடந்துள்ள நிலையில் மூன்றாம் உலகப் போர் பற்றிய இவர்களின் எதிர்வு கூறல் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
இது இவ்வாறு இருக்க மூன்றாம் உலகப் போரை பற்றி அண்மையில் வெளிவந்த செய்தியானது மேலும் உலக மக்களிடத்தில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, "மூன்றாவது உலகப் போர் ஆரம்பித்தால் அது ஐந்து, ஆறு மாதங்கள் என நீடிக்காது. மாறாக ஒரு வாரத்தில் நிறைவு பெற்று விடும் என பாதுகாப்பு துறை சார்ந்த சர்வதேச நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மூன்றாம் உலகப் போருடன் தொடர்பு படுத்தி பேசப்படும் அனைத்து நாடுகளிடமும் அணு குண்டு உள்ளிட்ட பாரிய ஆழிவை ஏற்படுத்த கூடிய ஆயுதங்கள் இருப்பதாகவும், அவை வெடிக்க ஆரம்பித்தால் நிச்சயமாக ஒரு வாரத்தில் மனித குலம் அழிந்து உலகப் போர் முடிவடைந்து விடும் என அவர்கள் காரணம் கூறியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

No comments