வவுனியாவில் கொடூரம்: சிறுவன் மீது சித்திரவதை


வவுனியா - குருமன்காடு பகுதியில், தந்தை வேறொரு பெண்ணைத் திருமணம் செய்த நிலையில் தாயுடன் வசித்த நான்கு வயதுச் சிறுவன், அப்பெண்ணின் இரண்டாவது கணவனால் அடித்து சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளான்.
இந்தச் சிறுவனைப் பார்க்க அவனது தந்தை, (தனது மனைவியின் முன்னாள் கணவன்) ஞாபகம் வருவதாகக் கூறியே அவன் சிறுவனைத் தாக்கியுள்ளான்.
தற்போது சிறுவன் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகக் சேர்க்கப்பட்டுள்ளான்.
சிறுவனைச் சித்திரவதை செய்தவனைக் கைது செய்ய பொலிஸார் தேடி வருகின்றனர்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.