அம்பாறையில் மாணவியின் திருவிளையாடல்!! பொலிசாரின் உதவியுடன் முறியடிப்பு!!
அம்பாறையில் மாணவியின் திருவிளையாடல்!! பொலிசாரின் உதவியுடன் முறியடிப்பு!!
உயர் தர பரீட்சையை புளுத் டுத் உதவியுடன் எழுதிய மாணவி கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் உள்ள முக்கிய பாடசாலை ஒன்றில் நேற்று (13) உயர்தர பரீட்சைக்கா மாணவி ஒருவர் பாடத்திற்கு தோற்றி இருந்தார்.
இந்நிலையில் குறித்த மாணவி தனது உடலை முழுவதும் கலாச்சார உடையுடன்(ஹபாயா) அணிந்து வந்திருந்தார்.
பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் சந்தேகத்திற்கிடமாக குறித்த மாணவியின் சத்தம் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த மாணவியை பிரத்தியேக அறைக்கு அழைத்து சென்று பரீசோதனை மேற்கொண்ட நிலையில் மாணவியின் காதில் செயல்பாட்டில் இருந்த வண்ணம் இயர் போன்(புளுத் டுத்) இயங்கிக்கொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் நடைபெற்ற போது தனது சட்டவிரோத செயற்பாட்டை மறைக்க மாணவி அபயக்குரல் எழுப்பியுள்ளார்.
எனினும் ஏனைய பரீட்சாத்திகளும் குறித்த மாணவிக்காக பரிதாபப்படவில்லை. இதனால் பரீட்சை சகல செயற்பாட்டில் இருந்தும் மாணவி இடைநிறுத்தப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

No comments