அளவெட்டி ஸ்ரீ நாகவரதர் நாராயணன் தேவஸ்தான நாராயணன் பக்தி பாமாலை எனும் இசை வெளியீடு - 14.09.2017
அளவெட்டி பதியுறை ஸ்ரீ நாகவரதர் நாராயணன் தேவஸ்தான 2017 ம் ஆண்டு மகோற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தின் தேவஸ்தான நிர்வாகியால் முற்றிலும் ஈழத்து கலைஞர்களைக்கொண்டு நாராயணன் பக்தி பாமாலை எனும் இசை வெளியீடு
நாளை 14.09.2017 வியாழனன்று மாலை திருக்கல்யாண உற்சவ நாளான நாளை நடைபெறவுள்ளது .
இந்த இசைத்தட்டில் நாராயணன் புகழையும் ஆலய வரலாறும் ஆலயத்தின் மகிமையையும் நம் ஈழத்து கவிஞர் சிவானந்தன் றஜித் அழகிய தமிழால் செதுக்கி வார்த்திட அதற்கு இசையால் இனிமை சேர்த்திருக்கிறார் ஈழத்து அருணா இசைக்குழுவின் வாரிசு அருணா கேதிஸ் இசையமைத்துள்ளார்.
இப்பாடல்களுக்கு தங்கள் தேன்சிந்தும் குரலால் பாடியவர்களான
அருள் விக்கினேஸ்வன்
மோகன்
மதுசிகன்
ஜெகனி
நாளை இடம் பெறும் இசை வெளியீடட்டில் பங்கு கொண்டு நாராயணன் புகழ்பாடும் பாமாலை கேட்டு பக்தி பரவசம் அடைய அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள் அளவெட்டி ஸ்ரீ நாகவரதர் நாராயணன் தேவஸ்தானம்

No comments