1ம் திகதி முதல் முச்சக்கர வண்டிகளில் டெக்ஸி மீட்டர் பொருத்தப்படுதல் கட்டாயம் : அறிவித்தல் வர்த்தமானி
எதிர்வரும் முதலாம் திகதி முதல் முச்சக்கர வண்டிகளில் டெக்ஸி மீட்டர் பொருத்தப்படுதல் கட்டாயம்!
எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு டெக்ஸி மீட்டர் பொருத்தப்படுதல் கட்டாயமாக்கும் அறிவித்தல் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய பயண நிறைவின் போது பயணிகள் பணம் செலுத்திய பின்னர் அவர்களின் விருப்பத்திற்கு அமைய பற்றிசீட்டு வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணித்த தூரம், வாகன பதிவு இலக்கம், அறிவிடப்பட்ட தொகை மற்றும் பயண திகதி என்பன பற்றுச்சீட்டில் குறிப்பிடபட்டிருத்தல் அவசியமாகும்.
மேலும், முச்சக்கரவண்டியின் சாரதியின் இருக்கைக்கு பின் பகுதியில் பயணிகளுக்கு தௌிவாக தெரியக்கூடிய வகையில், வாகன பதிவு இலக்கம், சாரதியின் பெயர், நிழற்படம் என்பன காட்சிப்படுத்தப்படுதல் வேண்டும்.
முச்சக்கரவண்டி சாரதியாக சேவையாற்றும் அனைத்து சந்தர்ப்பங்களிலும், குறுகிய காலத்திற்குள் விரைவாக சென்றடைய கூடிய வீதியூடாக பயணிகள் செல்லக்கூடிய இடங்களுக்கு அவர்களை அழைத்து செல்ல வேண்டுத் எனவும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு முச்சக்கர வண்டியிலும் அதன் வலது பக்கத்தினூடாக பயணிகள் வண்டியில் ஏறுவதற்குகோ அல்லது இறங்குவதற்கோ இடமளிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments