காலத்தால் மறக்கமுடியாத நாள் இன்று : வல்லரசே அதிர்ந்துபோன 2001.09.11 நினைவிருக்கிறதா இரட்டை கோபுரங்கள்
11 செப்டம்பர் 2001 : காலை 8.45 மணியளவில் (இலங்கை நேரப்படி இரவு 7.00 மணி) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரங்கள் (டுவின் டவர்ஸ்) மீது அல்கய்தா தீவிரவாதிகள் இரண்டு விமானங்களை கடத்தி மோதவிட்டனர். இதனால் 2,997 பேர் பலியாயினர். 3,000 க்கும் அதிகமானவர்கள் கை, கால் இழந்து படுகாயமடைந்தனர்.
மற்றும் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் கட்டிடங்களில் மீதும் ஒரு விமானத்தை கடத்தி மோதவிட்டனர், இதில் ராணுவ வீரர்கள் உட்பட 189 பேர் பலியாயினர்.
மற்றொரு விமானத்தை பென்சில்வேனியாவில் தரையில் மோதவிட்டு வெடிக்க செய்ததில் விமானத்தில் இருந்த 93 பேரும் பலியாயினர்.
தீவிரவாதிகள் ஒரே நாளில் நடத்திய இந்த விமான தாக்குதலில் 3,250 பேர் கொல்லப்பட்டனர். 60,000 கோடி ரூபாய் அளவுக்கு பொருட்கள் சேதமடைந்தது.
இரட்டை கோபுரம் இருந்த இடம் தற்போது நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது.


No comments