இலங்கை மக்களே எச்சரிக்கை விரைவில் 5000 ரூபா நாணயத்தாள் தடைசெய்யப்படும்

ஸ்ரீலங்கா மற்றும் தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் போலி நாணயத்தாள் புழக்கத்தில் உள்ளதாக அரசாங்க அச்சுப்பொறித் திணைக்களம் தெரிவித்துள்ளது.


ஸ்ரீலங்காவில் போலி நாணயத்தாள் அச்சிடப்படுவது குறித்து ஒவ்வொரு மாதமும் முறைப்பாடு பதிவாகுவதாகவும், இது தொடர்பில் மாதத்திற்கு நான்கு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

போலி நாணயத்தாள் அச்சிடலைத் தடுக்கும் தொழில்நுட்ப முறைகள் இலங்கையில் பயன்படுத்தப்படாமையினாலேயே இவ்வாறு போலித் தாள்கள் அச்சிடும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பான சில தொழில்நுட்பங்கள் ஸ்ரீலங்காவின் வங்கி கட்டமைப்புக்குள் மாத்திரமேயுள்ளது. இதனால் பொதுவாக போலி நாணயத்தாள்களைக் கண்டறியும் முறையில் சிக்கல் தனமை நிலவுகின்றது.

நாட்டில் கடந்த சில மாதங்களாக மோசடியான முறையில் அச்சிடப்பட்ட 5000 ரூபாய் தாள்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் 5000 ரூபாய் தாள் தொடர்பில் தீர்மானமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதனைக் கட்டுப்படுத்துவதற்காக 5000 ரூபாய் தாள்களை தடை செய்வதற்கான நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அச்சுப்பொறி அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.