கிளிநொச்சி வாள்வெட்டில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகியதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாள் வெட்டுக்குள்ளானவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸார் மேதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments