யாழ். பலாலி இராணுவ வீரர் துப்பாகியுடன் தப்பியோட்டம்
யாழ். பலாலி இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் துப்பாகியுடன் தப்பியோடியுள்ளார்.
குறித்த சிப்பாய் நேற்று இரவில் இருந்து காணாமல் போயிருக்காலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது.
இவர் 4 ஆவது படைப்பிரிவை சேர்ந்தவர் எனவும், காவலறணுக்கு கடமைக்கு செல்வதாக கூறி சென்றவர் இவ்வாறு தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பலாலி இராணுவ முகாம் இராணுவத்தினர் அவரை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments